districts

திருச்சி முக்கிய செய்திகள்

கல்லூரியில் குற்ற விழிப்புணர்வு முகாம்

அறந்தாங்கி,  அக்.2 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி அரசி னர் பாலிடெக்னிக் கல்லூ ரியில் சைபர் குற்ற விழிப் புணர்வு முகாம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ச. குமார் தலைமை வகித் தார். சைபர் குற்றப்பிரிவு புதுக்கோட்டை உதவி ஆய்வாளர் லதா மற்றும் தலைமை காவலர்கள் மோகனசுந்தரம், அருண் குமார் ஆகியோர், மாண வர்களுக்கு சைபர் குற்றங் கள் பற்றி கூறி விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் குமரேசன், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நூறு நாள் வேலை திட்ட சிறப்பு பயிற்சி முகாம்

தஞ்சாவூர், அக்.2 - தஞ்சாவூர் மாவட்டம்,  ஆவணத்தில் அமைந் துள்ள பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலு வலக கூட்ட அரங்கில், நூறு நாள் வேலைத் திட்டத்தை கிராம ஊராட்சிகளில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.  முகாமிற்கு, பேரா வூரணி ஒன்றிய ஆணை யர் சாமிநாதன் தலைமை  வகித்தார். ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட் சிகளிலும், நூறு நாள் வேலைத்திட்டத்தை திறம்பட செயல்படுத்து வது குறித்தும், பதிவே டுகள் பராமரிப்பது குறித் தும் பயிற்சிகள் வழங்கப் பட்டன. ஒன்றியத்தில் உள்ள 26 கிராம ஊராட்சி களில் பணியாற்றும் ஊராட்சி செயலர்கள்,  திட்ட ஒருங்கிணைப்பா ளர்கள், பணித்தள பொறுப் பாளர்கள் கலந்து கொண்டனர்.

கிழக்கு கடற்கரையில்  தூய்மை சேவை பணி

அறந்தாங்கி, அக்.2 - தூய்மையே சேவை என்ற ஒன்றிய அர சின் திட்டத்தின்கீழ் கிழக்கு கடற்கரை பகுதி யான பூம்புகார் முதல்  புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் வரை ஆங் காங்கே நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் தூய்மை பணி செய்தனர்.  இதனொரு நிகழ்வாக  அறந்தாங்கி அரசு கலை  மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் திட்ட அலுவலர் எஸ்.ரமேஷ் தலைமையில், புதுக்கோட்டை மாவட் டத்தில் கிழக்கு கடற் கரை பகுதியான மண மேல்குடி தாலுகா கடற் கரை பகுதி, வடக்கு புதுக்குடி கிராமத்தில் இருந்து தெற்கு புதுக்குடி  கிராமம் வரை தூய்மைப் பணி மேற்கொண்டனர்.  இந்த பணியை கோட்டைப்பட்டிணம் ஊராட்சி மன்றத் தலைவர்  அக்பர் அலி துவக்கி வைத்தார். கல்லூரி பேரா சிரியைகள் கலந்து கொண்டனர்.

புழுதியை உண்டாக்கும் மண் சாலை: அக்.4-இல் கடையடைப்பு போராட்டம்

பொன்னமராவதி, அக்.2 - பொன்னமராவதியின் முக்கிய பகுதியான அண்ணா சாலையில் புழு தியை உண்டாக்கும், மண் சாலையை உடனே சரிசெய்ய கோரி 24 மணி நேர கடையடைப்பு போராட்டம் நடைபெ றும் என பொன்னமராவதி வர்த்தக கழகம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி வர்த்தக கழகத்தின் செயற் குழு கூட்டம் தலைவர் பழனியப்பன் தலைமையில் வர்த்தகர் கழக மஹா லில் நடைபெற்றது. அதில், பொன்னம ராவதியின் முக்கிய வர்த்தகப் பகுதி யான அண்ணா சாலையில், கடந்த  ஆறு மாதத்திற்கு மேலாக நடைபெற்று  வரும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிகளால், சுமார்  ஒன்றரை கிலோ மீட்டர் வரை உள்ள  மண் சாலையை உடனே சரி செய்ய  வேண்டும். இந்த மண் சாலையை சீரமைப்பதாக, வட்டாட்சியர் முன்னி லையில் நடந்த பேச்சுவார்த்தையில் உறுதி யளித்தும் நடவடிக்கை இல்லை. தற்காலிக சந்தையால் மாண வர்கள், பொதுமக்கள் சந்தித்து வரும் நிலையில், கட்டி முடிக்கப்பட்ட புதிய  சந்தை கூடத்தில் அந்த சந்தை  இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அக்.4 (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை என பொன்னமராவதியில் உள்ள அனைத்து வியாபாரிகளும் 24  மணிநேர கடையடைப்பு போராட் டத்தில் ஈடுபட உள்ளனர் என தெரி விக்கப்பட்டுள்ளது.

ஒரே சிரிஞ்சில் 2 பேருக்கு ஊசி: செவிலியர் தற்காலிக பணிநீக்கம்

மயிலாடுதுறை, அக்.2 - மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரே சிரிஞ்சைக் கொண்டு இரண்டு பேருக்கு ஊசி செலுத்திய  செவிலியரை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சி யர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒரே சிரிஞ்சினை (ஊசி) கொண்டு ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ஊசி செலுத்தியதாக வரப் பெற்ற புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப் பட்டது.  அதில் உண்மை தன்மை இருப்பது தெரிய வந்த தன்படி, இச்செயலை செய்த செவிலியரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், அவர் மீது துறைரீதியான ஒழுங்கு நட வடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை இணை இயக்குநர்  உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற செயல்களில் எந்த செவிலியர்களும் ஈடுபட கூடாது எனவும், அவ்வாறு ஈடுபடும்பட்சத்தில் தொடர்புடைய செவிலியர்கள் மீது துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அக்.7-இல் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், அக்.2 - தஞ்சாவூரில் நடைபெற்ற இடதுசாரிக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அக்.7 ஆம்  தேதி தலைமை தபால் நிலையம் அருகே ஆயிரக்க ணக்கானோர் பங்கேற்கும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சி, சி.பி.ஐ (எம்.எல்) லிபரேஷன் உள்ளிட்ட இடதுசாரி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் தலைமையில், தஞ்சாவூர் காவேரி திருமண மண்டப வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. சிபிஎம் சார்பில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், பி.செந்தில்குமார், என்.சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.குருசாமி, சிபிஐ சார்பில், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்தி ராபதி, வடக்கு மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி, ஏஐடி யுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், செந்தில்குமார்,  சிபிஐ (எம்.எல்) லிபரேஷன் சார்பில் மாவட்டச் செயலாளர்  கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு  தொடுத்துள்ள இனப்படுகொலை தாக்குதலைக் கண்டித் தும், அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள் படுகொ லையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் அக்.7 அன்று நடைபெறவுள்ள மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒரு  பகுதியாக தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு  காலை 10 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்து வது, இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது என தீர்மா னிக்கப்பட்டது. 

கருப்புக் கவுனி நாற்று நடவில்  ஈடுபட்ட அரசுப் பள்ளி மாணவிகள் 

கும்பகோணம், அக்.1- பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவர்கள்  மனிதகுலம் மற்றும் உலக உயிரினங்களை பாதுகாப்ப தற்கு விவசாயத்தை கற்றுக் கொடுக்கவும் இயற்கை விவ சாயத்தை தொடர்ந்து செய்திடவும் வலியுறுத்தி விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சோழ மண்டல இயற்கை உழவர்கள் கூட்டமைப்பும் நாச்சியார்கோவில் அரிமா சங்கமும் இணைந்து சோழ மண்டல உழவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், இயற்கை  விவசாயியுமான  ராஜேந்திரனுக்கு சொந்தமான இயற்கை  விவசாய பண்ணையில் பாரம்பரிய நெல் கருப்பு கவுனி  நடவு திருவிழாவை நடத்தின. முன்னதாக இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி வந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயரா மன் மற்றும் திருவள்ளுவர் படங்களுக்கு மாலை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது. இயற்கை விவசாயத்தில் மனிதர்களுக்கு நோயற்ற வாழ்வை தரும் கருப்பு கவுனி நடவு திருவிழாவில் விழிப்புணர்வு பெற, கும்பகோணம் அருகே உள்ள நாச்சி யார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லி தலைமையில், பள்ளி ஆசிரி யைகள், நாட்டு நலப்படுத்திட்ட மாணவிகள் வயலில் இறங்கி கருப்பு கவுனி நாற்றினை நடவு செய்தனர். நடவு  விழாவிற்கு திருநறையூர் ஊராட்சி மன்றத் தலைவர் ரமா  மணி தலைமை வகித்தார். 

ரவுடி கொலை வழக்கில் 7 பேர் கைது: ஒருவர் நீதிமன்றத்தில் சரண்

தஞ்சாவூர், அக்.2-  தஞ்சாவூர் கரந்தை மிளகுமாரி செட்டித் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (35). இவர் மீது கொலை, அடிதடி  உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. காவல்துறையின் ரவுடி பட்டியலில் இடம்பெற்ற அறிவழகன் கடந்த செப்.25  அன்று இரவு கரந்தை புற்று மாரியம்மன் கோயில் அருகே உள்ள வடவாற்றங்கரையில் மது அருந்திக் கொண்டி ருந்த போது கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட  விசாரணையில், அறிவழகனுக்கும், கரந்தை கீரைக்காரத்  தெருவைச் சேர்ந்த திவாகருக்கும் (30) முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் நீதி மன்றத்தில் அறிவழகனும், திவாகரும் கடந்த செப்.25  அன்று தனித்தனி வழக்கு தொடர்பாக ஆஜராகினர். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பிறகு இருவருக் கும் தகராறு ஏற்பட்டது. பின்னர், அறிவழகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து சம்பவ இடத்தில் மது அருந்தியுள்ளனர். அப்போது, அங்கு  திவாகர் மற்றும் சிலர் வந்து அறிவழகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதை யடுத்து காவல்துறையினர் திவாகர் உள்ளிட்ட சிலரை தேடி  வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய திவாகர், தஞ்சாவூர் அருகே வடகால் கீழத்தெரு திலீப்குமார்  (21), சிங்கப்பெருமாள் குளம் பார்த்திபன் (24 ), கரந்தை ராயர்தெரு சியாம் (21), கீழ கீத்துகார தெரு ஹரி ஹரன் (24), செல்வகுமார் (25), ரெட்டிப்பாளையம் ரோடு  வகாப் நகர் கந்தவேல் (24) ஆகிய 7 பேரை காவ‌ல்துறை ‌யின‌ர் செவ்வாயன்று கைது செய்தனர். இதற்கிடையே கொலை வழக்கில் தொடர்புடைய சிங்கப்பெருமாள் குளத்தை சேர்ந்த பரத் (20) என்பவர், தஞ்சாவூர் எண்-2,  நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.