districts

திருச்சி முக்கிய செய்திகள்

வடகாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  கூடுதல் மருத்துவர்களை நியமிக்க சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, பிப்.10-  ஆலங்குடி அருகே வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, வடகாடு குருந்தடிப்புஞ்சை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு திலீபன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கவிவர்மன், கி.ஜெயபாலன், ஒன்றியச் செயலாளர் ஆ.குமாரவேல் ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளராக சிவராஜ் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, இரவு நேரம் மருத்துவர்கள் இல்லாததால் சாதாரண வியாதிகளுக்கு கூட தொலைதூரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அலையவிடும் போக்கு உள்ளது. எனவே, வடகாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமித்து 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனையாகத் தரம் உயர்த் வேண்டும். வடகாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு செயலாளர் இல்லாததால் பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, புதிய செயலாளர் நியமனம் செய்யப்படும் வரை அருகில் உள்ள சங்கத்தின் செயலாளரை கூடுதல் பொறுப்பாக நியமிக்க வேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாரத சாரண, சாரணியர் மாணவர்கள்  தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.10-  நாடு முழுவதும் 80 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 12 லட்சம் பேரும் சாரண சாரணியர் இயக்கத்தில் உள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தால் 10,12 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கற்றல் மற்றும் பயிற்றுவித்தலை எளிமையாக்க, நவீனமாக்க 80,000 ஆசிரியர்களுக்கு கை, கணினி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளிநாடுகளுக்கும் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பள்ளிக் கல்வித்துறை தமிழ்நாட்டுக்கே பெரும் புகழை ஈட்டித் தருகிறது. நாளைய குடிமக்களான மாணவர்களிடம் சமூக சேவை, உற்று நோக்குதல் ஏற்படுத்துகிறது என சாரண சாரணியர் வைர விழாவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவிகள் தெரிவித்ததாவது:  என் பெயர் மோனிகா, நான் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து வருகிறேன். எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். இது எனக்கு முதலாவது சாரண சாரணியர் விழாவாகும். இதில் பல்வேறு விளையாட்டு போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா, மலேசியா போன்ற பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுடன் இணைந்து விளையாடியது கலந்துரையாடிது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற விளையாட்டுகளில் மீண்டும் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெயர் பவித்ரா, கர்நாடக மாநிலத்திலிருந்து வருகிறேன். நான் என் குழுவுடன் இதில் கலந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். எனக்கு இது இரண்டாவது ஜம்போரி. இங்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தன. இது சர்வதேச ஜம்போரி. இந்த சிறப்பான வாய்ப்பினை எனது கர்நாடக மாநிலத்திற்கும், எனக்கும் வழங்கிய  தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது பெயர் மகேஷ் பாபு கர்னூல் ஜில்லா ஆந்திரா மாநிலத்திலிருந்து வருகிறேன். நான் 75 ஆவது பாரத சாரண, சாரணியர் வைர விழா பெருந்திரளணி விழாவில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்வில் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டது பெரிதும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் இது போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்து தந்த தமிழக முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்றாக அறிவிக்க உயர்நீதிமன்றத்தில் மனு

மதுரை, பிப்.10-  திருப்பரங்குன்றம் மலையை சமணர்  குன்று என அறிவித்து, சமண கொள்கை களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற் கொள்ள தடை விதிக்க உத்தரவிடக் கோரி  மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை யடுத்து திருப்பரங்குன்றம் குறித்து நிலுவை யில் உள்ள அனைத்து வழக்குகளோடும் சேர்த்து இந்த வழக்கையும் பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர் விழுப்புரம் ஸ்வஸ்தி லட்சுமி சேன சுவாமி  தாக்கல் செய்த மனு விபரம் வருமாறு: மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் சமண நினைவுச் சின்னங்கள் பல  உள்ளன. திருப்பரங்குன்றம் கோவில் சமண சமயத்திற்கான பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது. ஆனால் தற்போது திருப்  பரங்குன்றம் மலை இந்துக்களுக்கு மட்  டுமே சொந்தமானது என பல இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. திருப்ப ரங்குன்றம் மலையிலும், அதைச் சுற்றி யுள்ள பகுதிகளிலும் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் உள்ள தமிழ்-பிராமி எழுத்துக்கள், அவை சமண காலத்தைச் சேர்ந்தவை என்பதை உறுதிபடுத்துகிறது.   திருப்பரங்குன்றம் சமண மத நட வடிக்கைகளுக்கான ஒரு தலமாகும். திருப்  பரங்குன்றம் மலையின் ஒரே இடத்தில்  பாறையின் சுமார் 1 அடி உயரத்தில் இரண்டு  சமண பாறைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த மலைகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக, மற்ற மதங்களைச் சேர்ந்த சிலர் இந்த மலைகளில் உள்ள சமண குகைகளை சீர்குலைப்பது போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  இது அவமரியாதை செய்யும் வகையில்  உள்ளது. இது சமண மக்களின் மத உணர்வு களை பாதித்துள்ளது. இந்த சட்ட விரோத செயல்களால் திருப் பரங்குன்றம் பகுதியில் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு சமண சம யத்தினருக்கு சொந்தமான திருப்பரங்குன்  றம் மலையை பிறர் உரிமை கொண்டாடு வது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே திருப்ப ரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவித்து, சமண கொள்கைகளுக்கு எதி ரான நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை  விதிப்பதோடு, திருப்பரங்குன்றம் மலை யை மீட்டெடுத்து, பராமரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு,  விக்டோரியா கவுரி அமர்வு முன்பாக திங்க ளன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா மற்றும்  கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதி ரவன் மற்றும் ரவீந்திரன் ஆகியோர் ஆஜ ராகி, திருப்பரங்குன்றம் மலை விவகாரம்  தொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் நிலு வையில் இருப்பதாக தெரிவித்தனர். அதோடு, அரசு யாரிடமும் மதபாகுபாட்டை  காட்ட விரும்பவில்லை. நல்லிணக்கத்தை யே விரும்புகிறது என தெரிவித்தனர். தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகா சம் கோரப்பட்டது.  அதையடுத்து நீதிபதிகள், “தமிழக தொல்லியல் துறை தரப்பில் பதில் மனு  தாக்கல் செய்யவும், இந்த வழக்கை நிலு வையில் உள்ள அனைத்து வழக்குகளோடு  சேர்த்து பட்டியலிடவும் உத்தரவிட்டு வழ க்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

கும்பகோணம் மகளிர் கல்லூரியில் கலாச்சார, பாரம்பரிய சுற்றுலா கருத்தரங்கம்

கும்பகோணம், பிப்.10- கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் மற்றும் கும்பகோணம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியின் (தன்னாட்சி) வரலாற்றுத் துறையும் இணைந்து நடத்திய “கலாச்சார மற்றும் பாரம்பரிய சுற்றுலா “ என்ற தலைப்பில் ஒருநாள் மாநில அளவிலான கருத்தரங்கம் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், கல்லூரியின் முதல்வர் பிரமீளா தலைமையுரையாற்றினார். துறைத்தலைவர் சாந்தா ஜெயக்குமாரி வரவேற்புரையாற்றினார். தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜெயசீலி வாழ்த்துரை வழங்கினார். பின்பு கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க தலைவர் கோபிநாத் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.  நிகழ்வின், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் கலந்து கொண்டு மாண விகளிடம் “கலாச்சார மற்றும் பாரம்பரிய சுற்றுலா” என்ற தலைப்பில் சுற்றுலா துறை பற்றியும், அதன் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது பற்றியும் விளக்கி பேசினார். மேலும் சுற்றுலா துறையுடன். வரலாற்றுதுறை மாணவர்கள் இணைந்து பல ஆக்கப் பூர்வமான முன்னெடுப்புகளை செய்யவேண்டும். நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த தகவல்களை முழுவதுமாக வரலாற்று நோக்கில் ஆராய்ந்து, அதனை, சுற்றுலா வரும் ஆர்வலர்களுக்கு நாம் எடுத்து கூறவேண்டும் என கூறினார். தஞ்சை மாவட்டத்தில் கோவில் மாநகரமான கும்பகோணம், பாரம்பரிய சுற்றுலாவிற்கு பெயர் போனது. இதனைச் சுற்றி மத்திய தொல்லியல் துறை மற்றும் யுனெஸ்கோ நினைவு சின்னங்களான தஞ்சாவூர் பெரியகோயில், கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் போன்றவை உள்ளன.  இதனைச் சார்ந்து சுற்றுலா எவ்வாறு செயல்படுகிறது என கூறி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை கும்பகோணத்தில் பாரம்பரிய மரபு நடை நடைபெறுகிறது. மாணவிகள் அனைவரும் அதனை பயன்படுத்தி உங்கள் ஊரின் வரலாற்றினை தெரிந்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என கூறினார்.  மேலும், இந்த துறையில் பெறக்கூடிய வேலை வாய்ப்புகள் குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முனைவர் சுஜாதா ஒருங்கிணைத்தார். துறையின் மற்ற பேராசிரியர்களும், மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள்.

பைக் ஓட்டிய சிறுவனுக்கும் தந்தைக்கும் அபராதம்

குழித்துறை, பிப். 11- மார்த்தாண்டம் பகுதியில் தினசரி காலையில் வாகன சோதனை செய்யப்பட்டு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம்  விதிக்கப்பட்டு வருகிறது .மேலும் அதிக சத்தத்துடன் வரும் பைக்குகளுக்கு  அபராதம்  விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மார்த்தாண்டன் போக்கு வரத்து  துணை ஆய்வாளர் செல்லசாமி தலைமையில் மார்த்தாண்டத்தில் அதிரடி வாகன சோதனை நடந்தது. அப்பொழுது 17  வயதில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த இரு மாணவர்கள் சிக்கினர். இவர்கள் பள்ளி யில் பிளஸ் டூ படித்து வருகின்றனர். இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது .இதனைத் தொடர்ந்து பள்ளி  சிறுவனுக்கும் அவரது தந்தைக்கும் அபரா தம் விதிக்கப்பட்டது.

தஞ்சாவூரில் உள்நாடு, வெளிநாடு நாய்கள் கண்காட்சி

தஞ்சாவூர், பிப்.10-  தஞ்சாவூர், புதுக்கோட்டை சாலையிலுள்ள மிருகவதை தடுப்புச் சங்க பசு மட வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை, மிருகவதை தடுப்பு சங்கம்  ஆகியவற்றின் சார்பில் நாய்கள் கண்காட்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பாரம்பரிய நாய் இனங்களைப் பாதுகாக்கவும், செல்லப்  பிராணிகள் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தவும், ஆதரவற்று  சுற்றித் திரியும் நாய்களைத் தத்தெடுக்கவும், பிராணிகள் வதைக் கொடுமையில் சிக்காமல் இருக்கவும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இக்கண்காட்சியை  மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் நாட்டு மற்றும் வெளிநாட்டு நாய்க ளான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, அலங்கு, கொம்பை, ஜெர்மன் ஷெபர்ட், லாப்ரடோர், ரெட் ரீவர், சைபீரி யன் ஹஸ்கி, கோல்டன் ரெட்ரீவர் போன்ற பல்வேறு வகை களைச் சார்ந்த நூற்றுக்கும் அதிகமான நாய்கள் இடம் பெற்றன. சிறந்த நாட்டு மற்றும் அன்னிய வகை நாய்கள், நாய்களின் புத்திசாலித்தனம் மற்றும் கட்டுப்பாட்டுத் திறன் குறித்து பரிசோதிக்கப்பட்டு, அவற்றை வளர்ப்போருக்கு பரிசு கள் வழங்கப்பட்டன. சிறந்த நாய் பராமரிப்பு மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து வல்லுநர்கள் விளக்கமளித்த னர். மேலும், நாய் தத்தெடுப்பு முகாமும், பங்கேற்கும் அனைத்து நாய்களுக்கும் இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கால்நடை துறையினர் செய்தனர்.