tamilnadu

img

வி.சி. சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்றார்!

சென்னை, பிப். 10 - ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேர வை உறுப்பினராக வி.சி. சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செய லகத்தில், திங்களன்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவை தலைவர் மு‌. அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், காங்கிஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண் முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளன் எம்.பி. உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.