தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி தி.மு.க எம்.பி கனிமொழி எம்.பி நோட்டீஸ் அளித்துள்ளார்.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமர்க்கார சிக்ச அபியான்) கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்குத் தமிழ்நாட்டிற்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் ஒன்றிய அரசின் பங்களிப்பான ரூ.2,152 கோடியில், முதல் தவணையாக ரூ. 573 கோடியை ஜூன் மாத்திலேயே விடுவித்திருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு விடுவிக்கவில்லை. மாறாக, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் உடனே விடுவிக்கப்படும் என நிர்ப்பந்திக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு அரசு ஏற்காததால், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.2,152 கோடியை பிற மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்தது ஒன்றிய அரசு. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து மக்களவையில் விவாதிக்கக் கோரி தி.மு.க எம்.பி கனிமொழி எம்.பி நோட்டீஸ் அளித்துள்ளார்.