tamilnadu

img

மாநில அரசு உரிமையை கேட்டால் மாணவர்களைப் பழிவாங்குவதா?

சென்னை, பிப். 10 - மாநில உரிமையைக் கேட்டுப் போராடுவதற்காக, தமிழக மாண வர்களை பழிவாங்கும் ஒன்றிய அர சின் போக்கு கடும் கண்டனத்திற்கு உரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சாடியுள்ளது. இது தொடர்பாக கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ரூ. 2,152 கோடியை வழங்குவதற்கு மறுப்பு

தமிழ்நாட்டுக்கு, கல்விக்காக ஒன்றிய அரசின், ‘சமக்ர சிக்ஷா அபி யான்’  (எஸ்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய 2 ஆயிரத்து 152 கோடி ரூபாய் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க மறுத்திருக்கிறது. ஒன்றிய அரசின் நிபந்தனையை ஏற்கவில்லை என்பதற்காக- தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி யை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்திரு க்கும் ஒன்றிய ஆட்சியின் போக்கு மிகுந்த கண்டனத்திற்குஉரியதாகும். ஒன்றிய அரசின் பங்களிப்போடு செயல்படுத்தப்படும் ‘சமக்ர சிக்ஷா  அபியான்’ திட்டத்தில் மாநிலங் களுக்கு சிறிதளவு உதவி செய்யப்படுகிறது. அந்த திட்டத்தில் மாநில அரசாங்கம் 40 சதவிகித நிதிச் சுமையை ஏற்றுக் கொண்டால் ஒன்றிய அரசு 60 சதவிகித நிதியை தரும். இது அல்லாமலும் கூடுத லான நிதியை மாநில அரசு தன்னு டைய பள்ளி களுக்காக செலவிட்டு வருகிறது.  சொற்ப நிதியையும்  நிறுத்தி வஞ்சனை இப்படி யான சூழலில், தான்  கொடுத்துவரும் சொற்ப நிதி  உதவி யையும் நிறுத்தி பழிவாங்கு வதற்கு ஒன்றிய ஆட்சி முயற்சிக் கிறது. உண்மை வெளியே வந்த பின்னர், முழுப் பூசணிக்காயை பொய்யில் மறைக்கலாம் என்று பாஜக தமிழ்நாடு தலைவர் முயற்சிக் கிறார்.

‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்ட  நிதியை மறுப்பது பற்றிய பிரச்சனை சென்ற ஆண்டே வந்தது. அப்போது  மாநில அரசாங்கம் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை ஏற்க வேண்டும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிர தான் கூறினார். தமிழ்நாடு அரசும் சில பள்ளிகளை தேர்வு செய்து அனுப்பியது. ஆனால், அதற்கு பிறகுதான், பி.எம்.ஸ்ரீ. திட்டத்திற்காக போடப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  ‘தேசிய கல்விக் கொள்கையை முழுமையாக ஏற்க வேண்டும்’ என்ற வற்புறுத்தல் இடம்பெற்றிருப்பதை தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டியது. 

விஷத் திணிப்பை  ஏற்காததால் பழிவாங்குவதா?

“தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதானால்- மும்மொழிக் கொள்கை, கல்வியில் வணிகமயம், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த விஷம் திணிப்பு என எல்லாவற்றையும் ஏற்ப தாகும்; அவ்வாறு கையெழுத்திட மாட்டோம்” என தமிழ்நாடு அரசு மறுத்தது. ஓரிரு பள்ளிகளை மேம்படுத்த பகுதியளவு நிதி கொடுத்துவிட்டு ஒட்டுமொத்த கல்வி கொள்கையை மாற்ற நிர்ப்பந்திப்பது என்ன நியா யம்? என்ற கண்டனக் குரல்கள் அப்போதே எழுந்தன. தனது தவறில் இருந்து எந்தவொரு பாடத்தையும் கற்க மறுக்கும் ஒன்றிய அரசு, மாநில உரிமையை மறுத்து மாணவர்களை பழிவாங்கும் போக்கில் மீண்டும் இறங்கியுள்ளது.

நிபந்தனையின்றி  நிதியை ஒதுக்குக!

மாநிலங்களுக்கு தரவேண்டிய சட்டப்படியான பங்கீட்டையே குறைத்து வழங்கும் ஒன்றிய ஆட்சி, கல்விக்கான நிதியை வெட்டு வதும், புதிய, புதிய நிபந்தனை களை விதிப்பதையும் சிபிஎம் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக் கிறது. உடனடியாக தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு எந்த  நிபந்தனையுமின்றி வழங்க வேண்டு மென்று சிபிஎம் வலியுறுத்துகிறது.  மாநில உரிமைக்காகவும், மாண வர் நலனுக்காகவும் அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனக்குரலை எழுப்ப வேண்டுமென சிபிஎம் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.