tamilnadu

img

ஆட்சேபணையற்ற புறம்போக்கில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா

சென்னை, பிப். 10 - தமிழ்நாடு அரசின் 18-ஆவது அமைச்ச ரவைக் கூட்டம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்களன்று (பிப்.10) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச் சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார்.  அப்போது, “ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் முதலமைச்சர் மிகப்பெரிய புரட்சியை செய்துள்ளார். சென்னையை சுற்றி உள்ள 4 மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.  இதன்மூலம் சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் உள்ள 32 கிலோ மீட்டருக்குள் உள்ள ஆட்சேபனையற்ற புறம்போக்கில் வசிக்கும் 29 ஆயிரத்து 187 பேர் பயன்பெற உள்ளனர். சென்னை மாநகராட்சியைத் தவிர்த்து மற்ற இடங் களில் வசிக்கும் 86 ஆயிரம் பேரும் பட்டா பெற்று பயனடைய உள்ளனர்.

1962-இல் இருந்து இன்றுவரை தீர்க்கப்படாமல் இருந்த பட்டா பிரச்சனைக்கு இன்று தீர்வு காணப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெரிவித்தார். “4 ஆண்டுகளில் 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது; மேலும், 6 மாதங்களில் 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கத் திட்ட மிட்டுள்ளோம்; பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்க லாம் என்றும் இதற்காக மாவட்ட அளவில் ஒரு குழுவும், மாநில அளவில் ஒரு குழுவும் அமைக்கப்பட உள்ளது” எனவும் குறிப்பிட்டார். இதனிடையே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், அமைச்சரவைக் கூட்ட முடி தொடர்பாக, தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “ஏழை, எளிய மக்களின் 63 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு.  சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங் களின் “பெல்ட் ஏரியாக்களில்” ஆட்சேப னையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாநகராட்சிகள் - நகராட்சிகள் - மாவட்டத் தலைநகரப் பகுதிகளில் 57,084  பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கி யுள்ளோம். 6 மாதங்களில் இதனைச் செய்துமுடிக்க இரண்டு குழுக்களையும் அமைக்கவுள்ளோம். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப் பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.