india

img

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சு ஒரு ஆண்டில் 74% அதிகரிப்பு!

புதுதில்லி.பிப்.11- இஸ்லாமியர்களுக்கு எதிராக பிரமர் மோடி 63 முறை வெறுப்புப் பேச்சுக்களை வெளிப்படுத்தியதாக ஆய்வறிக்கை வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களின் எண்ணிக்கை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 74.4% அதிகரித்துள்ளதாக இந்தியா ஹேட் லாப்(India Hate Lab) எனப்படும் அமெரிக்க அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் முன்வைக்கப்பட்டதாகவும் 2023ஆம் ஆண்டில் இது 233 சம்பவங்கள் என்ற நிலையைக் கடந்து 2024இல் 1,165 ஆக அதிகரித்துள்ளது. இதில் பிரதமர் மோடி 63 முறை வெறுப்புணர்வு கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் பாஜக தலைவர்களால் 450 வெறுப்புப் பேச்சுகள் பரப்பப்பட்டதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம்(242), மகாராஷ்ட்டிரா(210), மத்தியப் பிரதேசம்(98), ராஜஸ்தான்(74), உத்தரகாண்ட்(65), பீகார்(52) ஆகிய மாநிலங்களில் அதிக அளவிலும், பாஜக ஆளாத மாநிலங்களில் அதிகபட்சமாக ஜார்க்கண்டில் 85 வெறுப்பு பேச்சுக்களும் பரப்பப்பட்டுள்ளது.