அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
புதுதில்லி, பிப். 10 - ஊனமுற்றோர் உரிமை களுக்கான தேசிய மேடை யின் சார்பில், பல்லா யிரக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் தில்லி ஜந்தர் மந்தரில் திங்களன்று தர்ணாவில் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளி களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தில், ஒன்றிய அரசின் பங்காக ரூபாய் ஐந்தாயிரம் வழங்க வேண்டும்; ஓய்வூதியத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்; 40 சதவிகிதம் முதல் ஊனம் உள்ள அனைவருக்கும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத் திற்கு, சங்கத்தின் தலைவர் கிரிஷ் கீர்த்தி, செயல் தலைவர் எஸ். நம்புராஜன் தலைமை வகித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா, வி.சிவதாசன், ஏ.ஏ. ரஹீம், ஜான் பிரிட்டாஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), ஜாவித் அலி கான் (சமாஜ்வாதி), மைம் நூர் (திரிணாமுல் காங்கிரஸ்), திருச்சி சிவா (திமுக), பவு சியா கான் (தேசியவாத காங்கிரஸ்), ஹபீஸ் பீரன் (முஸ்லிம் லீக்), ஜோஸ் கே மாணி (கேரள காங்கிரஸ் கட்சி), சந்தோஷ் குமார் (சிபிஐ), அஜித் குமார் புலான் (சுயேச்சை), மஹுவா மாஜி (ஜேஎம்எம்)மற்றும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பா. ஜான்சி ராணி, என்பிஆர்டி பொருளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, நிர்வாகிகள் காந்தி கங்குலி, அதுவையா உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினர்.