தமிழ்நாட்டில் 1980 காலத்தில் அரசின் கோழி ஆராய்ச்சி நிறுவனங்கள் கறிக்கோழி வளர்ப்பை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தின. அரசின் கோழிக்குஞ்சு உற்பத்தி நிறுவனங்களிடம் நேரடியாகக் குஞ்சுகளை வாங்கி 100 முதல் 1000 கோழிகள் வரை யிலான சிறிய பண்ணைகளை உருவாக்கி பல்லடம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளால் கறிக்கோழிகள் வளர்க் கப்பட்டன. வளர்ந்த கோழிகளை விவசாயிகளிடமி ருந்து கறிக்கடைக்காரர்கள் மற்றும் வியாபாரிகள் நேரடி யாக வாங்கிச் சென்றனர். இக்காலத்தில் அரசு கால் நடைப் பராமரிப்புத் துறையின் துணை நிறுவனமான தமிழ்நாடு கோழி வளர்ச்சிக் கழகம் (டாப்கோ) கோழி வளர்ப்பை ஊக்கப்படுத்தி ஆதரவளித்தது. இதனைப் பயன்படுத்தி விவசாயத்துடன் கறிக்கோழி வளர்ப்பை ஒரு துணைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
தாராளமயக் கொள்கை
தனியார்மயம், தாராளமயக் கொள்கையை இந்தி யாவில் 1991 காலங்களில் அமல்படுத்திய பின்பு “அரசுக்கு கோழி வளர்ப்பில் என்ன வேலை” என உலக வங்கி நிர்பந்தம் கொடுத்ததால் ஒன்றிய அரசு கோழி வளர்ப்புக்கு நிதி ஒதுக்கீட்டை நிறுத்தியது. இதனால் விவசாயிகளுக்கு தேவையான குஞ்சுகளை அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொடுக்க முடிய வில்லை. விவசாயிகள் கோழிக் குஞ்சுகளுக்காக தனியார் நிறுவனங்களை சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மேலும் விவசாயத்தில் ஏற்பட்ட நெருக்கடியினால் விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்பு தொழிலை கைவிட முடியாத நிலைமையும், கறிக்கோழி வளர்ப்புக் கொட்டகைக்கான விவசாயிகளின் கடன் சுமையையும் பயன்படுத்திக் கொண்டு தனியார் கறிக்கோழி நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தை விவசாயிகள் மீது திணித்தன.
கறிக்கோழி ஒப்பந்த விவசாயம்
கறிக்கோழி ஒப்பந்த விவசாயத்தில் ஒப்பந்த விவ சாயத்தை நடத்தும் நிறுவனம் கோழிக்குஞ்சு, தீவனம், மருந்து மற்றும் மருத்துவ சேவையுடன் ஆலோச னைகளையும் கொடுக்கும். கோழிக்குஞ்சு வளர்ப்பிற் கான இடம், கொட்டகை, குடிநீர், மின்சாரம் மற்றும் உழைப்பைக் கொண்டு கறிக்கோழிகளை விவசாயி கள் வளர்க்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம், விவசாயிக ளுக்கு வளர்ப்புக் கூலியாக உயிருள்ள கோழிக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.6.50 கொடுத்து கோழிகளைக் கொள் முதல் செய்து கொள்ளும். இந்த ஒப்பந்த விவசா யத்தை வெங்கடேஸ்வரா, பயனீர், சாந்தி பார்சூன், சுகுணா உள்ளிட்ட தனியார் பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்நிறுவனங்கள் கறிக்கோழி ஒருங்கிணைப்பு கமிட்டி (Broiler Co-Ordination Committee - BCC) என்ற கூட்ட மைப்பை உருவாக்கி தன்னிச்சையாக கறிக்கோழி யின் விலையைத் தீர்மானிக்கின்றன.
கட்டாத வளர்ப்புக் கூலி
இதனால் உயிருள்ள கோழிக்கு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.7 வரை கொடுத்துவிட்டு வளர்ந்த கோழிகளை விவசாயிகளிட மிருந்து எடுத்துக் கொள்கின்றனர். கோழி உட்கொள் ளும் தீவனம் மற்றும் அதன் எடை வளர்ச்சியின் அடிப்ப டையில் தான் விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலி கொடுக்கப்படுகிறது. அதாவது ஒரு கோழி 4 கிலோ தீனி தின்று 40 முதல் 45 நாட்களுக்குள் 2 கிலோ எடை ஏறினால் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.5 வீதம் கூலியாக கொடுக்கின்றனர். கறிக்கோழியின் அதி கரிக்கும் எடை ஒரு கிலோவுக்கு ஏறத்தாழ ரூ.6 வரை விவசாயிகள் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு கட்டுபடியாகவில்லை. விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ள போதிலும் கடந்த பல ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படவில்லை.
கடந்த 2013ஆம் ஆண்டு முத்தரப்பு கூட்டம் நடத்தப்பட்டு கிலோவுக்கு வளர்ப்பு கூலியாக ரூ.6.50 கம்பெனிகள் கொடுக்க முடிவானது. ஆனால் இந்த விலை உயர்வை கம்பெனிகள் அமலாக்கவில்லை. கடந்த 2020ஆம் ஆண்டுக்கு பின்பு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னர் கம்பெனி கள் ரூ.6.50 வழங்கினார்கள். ஆனால் இந்த கூலியும் விவசாயிகளுக்கு கட்டுபடியாகவில்லை. தற்போது ஒரு கிலோ அதிகரிக்க கோழி வளர்ப்பு செலவு ரூ.10 ஆகிறது. மேலும் கடன் வாங்கி கொட்டகை அமைத்தல் மற்றும் மின்சாரம், குடிநீர், பராமரிப்பு கூலியாளின் சம்பளம், நிலவாடகை உள்ளிட்டவைகளை கணக் கிட்டால் ரூ.15 வரை செலவாகிறது. எனவே தான் ஒரு கிலோவுக்கு வளர்ப்புக் கூலியாக ரூ.20 கம்பெனிகள் வழங்கிட வேண்டுமென்று தொடர்ந்து விவசாயிகள் வற்புறுத்தி வருகிறார்கள்.
விவசாயிகளின் கோரிக்கைகள்
தமிழ்நாட்டில் 40 ஆயிரம் கோழி பண்ணைகள் உள்ளன. சுமார் 4 லட்சத்திற்கும் அதிகமான விவசாயி கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான பண்ணைகள் இருப்பதாக புள்ளிவிப ரங்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 3 கோடி பேர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் பிரதான கோரிக்கைகள்:
l வளர்ப்புக் கூலி ஒரு கிலோவுக்கு ரூ.20 கம்பெனிகள் தர வேண்டும்.
l ஆண்டுக்கு 6 முதல் 7 பேட்ஜ் குஞ்சுகள் வழங்க வேண்டும்.
l அரசே குஞ்சுகள் முன்பு போல் வழங்க வேண்டும்.
l தரமான 50 கிராம் எடையுள்ள குஞ்சுகள் கம்பெனிகள் தர வேண்டும்.
l கோழிகள் இறந்தால் அதனை வீடியோ எடுத்து கம்பெனிகளுக்கு அனுப்ப வேண்டும் என்கிற லைவ் நிகழ்வுகளை கம்பெனிகள் கைவிட வேண்டும்.
l கொட்டகைகள் அமைக்க மானி
யத்துடன் கூடிய கடன் வழங்க வேண்டும்.
l இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.
l எழுதப்படாத செக்லீப் கம்பெனிகள் வாங்கக் கூடாது
l கோழிப்பண்ணை மற்றும் விவசாயிகள், தொழிலா
ளர்களுக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும்.
l கோழி மற்றும் கொட்டகைகளுக்கு இன்சூரன்ஸ் வசதி குறைந்த பிரீமியத்தில் ஏற்படுத்த வேண்டும்.
lகோழிப்பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்க
ளுக்கு ஈ.எஸ்.ஐ மருத்துவ வசதி செய்திட வேண்டும்.
l பண்ணைகளிலிருந்து கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களை காவல்துறை மறித்து அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும்.
கறிக்கோழி உற்பத்தியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் உள்ளது. இது இந்தியாவின் விவசாய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதம் பங்களிக்கிறது. இத்தொழிலை நம்பி கோடிக்கணக் கான மக்கள் உள்ளனர். வெள்ளம், வறட்சிக் காலங்க ளில் விவசாயம் நெருக்கடியில் சிக்கும் போது விவசாயி களுக்கு மாற்றுத்தொழிலாக கோழி வளர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் மிகவும் நெருக்கடிகளை சந்தித்து வரு கிறார்கள். இவர்களை பாதுகாத்திட ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முறையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். கட்டுரையாளர் : தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர்