திண்டுக்கல். பிப்.10- மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 தேதி முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்ட வரவேற்பு குழு அமைப்புக் கூட்டம் திங்களன்று தெய்வ சிகாமணிபுரத்தில் உள்ள அரசு போக்கு வரத்து தொழிலாளர் சங்க (சிஐடியு) அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராம லிங்கம், என்.பாண்டி, திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், மாநில குழு உறுப்பி னர் ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.முத்துச்சாமி, பி.ஆஷாத், தா.அஜய்கோஷ், கே.ஆர். பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வரவேற்புக் குழு அமைப்பு தலைவ ராக திண்டுக்கல் மக்களவை உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம், செயலாளராக கே.பிரபாகரன், பொருளாளராக டி.முத்துசாமி உள்பட 300 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அகில இந்திய மாநாட்டு நிதி முதல் தவணையாக ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்தை மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என்.பாண்டி ஆகியோரி டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி வழங்கினார். அகில இந்திய மாநாட்டு நிதி வசூலிப்பதற்காக ஒவ்வொரு கட்சி குடும்பத்தினரும் தங்கள் சேமிப்பில் சிறிய தொகை ஒதுக்கீடு செய்வதற்காக திண்டுக்கல் மாவட்ட குழு சார்பாக 3 ஆயிரம் உண்டியல்கள் வழங்கப்பட்டன.