திருவாரூர், ஜன.16- திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியம் புளிச்சகாடி ஊராட்சி, புளிச்சகாடி வடக்கு தெருவில் வசிக்கும் தோழர் சி. முரளிதரன்(48) உடல் நலக்குறைவால் ஞாயிறுக்கிழமை காலமானார். இவர், சிபிஎம் மூத்த உறுப்பினரும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய பொருளாளருமான ஜெ. சிவசாமியின் மூத்த மகன் ஆவார். தோழரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, மாவட்டத் தலைவர் ஆறு. பிரகாஷ் ஆகியோர், மறைந்த தோழர் முரளிதரன் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் குடவாசல் ஒன்றியச் செயலாளர் டி.லெனின், நகரச் செயலாளர் டி.ஜி.சேகர் மற்றும் மாவட்டக்குழு, ஒன்றிய, நகரக்குழு உறுப்பினர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.