தஞ்சாவூர், ஜன.24 - தஞ்சாவூர் - விக்கிர வாண்டி இடையே, புதிய புறவழிச்சாலை பழைய எண் (என்.ஹெச்.45சி), புதிய எண் (என்.ஹெச்.36) 164.28 கிலோ மீட்டர் தூரம், மூன்று தொகுப்புகளாக பிரிக்கப் பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு பணிகள் துவங்கின. அதன்படி, தஞ்சாவூர் - சோழபுரம் இடையே 47.84 கி.மீட்டர் தூரம் ஒரு தொகுப் பாகவும், சோழபுரம் - சேத்தியாத்தோப்பு இடையே 50.48 கி.மீட்டர் தூரம் மற்றொரு தொகுப்பா கவும் என இரு தொகுப்பு களும் படேல் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி இடையே 65.96 கி.மீட்டர் தூரம் ஒரு தொகுப்பாகவும் பிரிக்கப் பட்டு ரிலையன்ஸ் நிறு வனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்நிலையில், படேல் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்த இரண்டு தொகுப்பு பணி களை முடித்தது. ஆனால், ரிலையன்ஸ் நிறுவனம் எடுத்த ஒப்பந்தப் பணிகள் 45 சதவீதம் கடந்த நிலை யில், பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டது. இதனால் ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரத்து செய்தது. மீண்டும் டெண்டர் விடப்பட்டு பணி கள் நடந்து வருகின்றன. தஞ்சாவூர் - சோழபுரம் இந்நிலையில், தஞ்சா வூர் - சோழபுரம் இடையே சாலைப் பணிகள் நிறை வடைந்த நிலையில், பாப நாசம் அருகே வேம்புக்குடி யில் வெள்ளிக்கிழமை முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்பட்டு, சாலை பயன்பாட்டிற்கு வரத் துவங்கியது. இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்தின் தஞ்சாவூர் - விக்கிர வாண்டி திட்ட இயக்குநர் செல்வகுமார் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “தஞ்சாவூர் - விக்கிர வாண்டி சாலையில், தஞ்சா வூர் - சோழபுரம் இடையே முழுமையாக பணிகள் நிறை வடைந்து, வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. வேம்புக்குடியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியில், கட்டணம் வசூ லிக்கும் பணியும் துவங்கப் பட்டுள்ளது. சோழபுரம் - சேத்தியாதோப்பு மற்றும் சேத்தியாதோப்பு - விக்கிர வாண்டி சாலை பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, போக்குவரத்திற்கு கொண்டு வரப்படும்” என்றார்.