பெரம்பலூர், ஜன.10- பெரம்பலூரில் பாரம்பரிய முறை யில் சமத்துவ பொங்கல் கொண்டாடி அசத்தினர். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறு வனத்தின் சார்பில், தனலட்சுமி சீனி வாசன் பல்கலைக் கழகத்தின் வேந்தர் அ.சீனிவாசன் தலைமையில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 5000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பொங்கல் விழாவில், பாரம்பரிய கலைகளை உணர்த்திடும் வகையிலும், உழைக்கும் உழவனை உயர்த்தி போற்றிடவும், பாரம்பரிய முறையிலான விவசாயம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் ஆகிய வற்றை மாணவிகள் செயல் விளக்கத் துடன் செய்து காண்பித்து அனை வரையும் வியக்க வைத்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் தாலத் தட்டு நடனம், கரகாட்டம், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நடனம், பாரம்பரிய குத்துவிளக்கு நடனம், பொய்க்கால்குதிரை ஆட்டம், புலியாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் ஒயிலாட்டம் போன்ற ஆட்டங்களும், பாரம்பரிய விளையாட் டான, உரி அடித்தலும் நடைபெற்றது. மூன்று குடிசைகள் அமைக்கப்பட்டு சூரிய பொங்கலிட்டு, மாணவிகள் துறை வாரியாகப் பொங்கல் சீர்வரிசை எடுத்தும் படையலிட்டனர். பாரம்பரிய இக்கொண்டாட்ட மானது, கல்வியோடு நம் முன்னோர் களின் கலாச்சார முறையினையும், விருந்தோம்பல் பண்பினையும், பாரம் பரியத்தையும் மாணவ, மாணவி களுக்கு எடுத்துக் கூறுவதாக அமைந்தது. விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் இயக்குநர் ராஜ பூபதி, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக கூடுதல் பதிவாளர், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.