districts

திருச்சி முக்கிய செய்திகள்

மூதாட்டியை தாக்கி  நகை பறிப்பு

பொன்னமராவதி, நவ.15 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி இந்திரா நகரில் தனியாக வசித்து வரு கிறார் 80 வயது மூதாட்டி  சின்னழகி. இவர் புதன் கிழமை இரவு 8 மணி யளவில் வீட்டில் இருந்த போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர்  தாக்கி, அவர் அணிந்தி ருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ளார்.  தகவலறிந்து வந்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் பத்மா, உதவி ஆய்வாளர் பூவர சன் ஆகியோர் தலைமை யிலான காவல்துறை யினர் மூதாட்டியை மீட்டு வளையப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரு கின்றனர். 

கணினி மன்ற விழா துவக்கம்

பெரம்பலூர், நவ.15 - பெரம்பலூர் மாவட்டம், வேப்பந் தட்டை வட்டம், நெற் குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை குழந்தைகள் தின விழா  மற்றும் கணினி மன்ற  துவக்க விழா நடை பெற்றது. பள்ளி தலைமை  ஆசிரியர் மலர்க்கொடி தலைமை வகித்து கணினி  மன்றத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாரம் பரிய சமைக்காத உணவு களை மாணவ, மாணவி கள் காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் கணினி சார்ந்த வினாடி வினா, கணினி சார்ந்த பேச்சு போட்டி, கணினி  சார்ந்த கவிதை மற்றும்  பாட்டு உள்ளிட்ட போட்டி கள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவி களுக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் செல்வாம்பாள் பரிசுகளை வழங்கி பாராட்டினார். கல்வியாளர் செல்வ மூர்த்தி, பள்ளி மேலாண்மை குழு நிர்வா கிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.  முதுகலை கணினி ஆசிரி யர் செ.சுதா நன்றி தெரி வித்தார்.

குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் வெற்றி அழகிரி மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து

பாபநாசம், நவ.15 - பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் குறுவட்ட அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர்.  இதில் குழுப் போட்டி ஹாக்கி-ஆண்கள் 14, 17, 19   வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம், ஹாக்கி பெண்கள் 17, 19  வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம், பெண்கள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டா மிடம், கூடைப்பந்து ஆண்கள் 14, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதலிடம், பெண்கள் 14, 17, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாமிடம், கைப்பந்து ஆண்கள் 17, 19  வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாமிடம், கோ கோ  ஆண்கள் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டாமிடம், எறிபந்து ஆண்கள் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரண்டா மிடம், டென்னிகாய்ட் ஆண்கள் 14 வயதிற்குட்பட்டோர்  இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம், பெண்கள் 17 வயதிற் குட்பட்டோர் இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம், பெண்கள் 19 வயதிற்குட்பட்டோர் ஒற்றையர், இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம், ஆண்கள் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில்  இரண்டாமிடம், பெண்கள் குண்டு எறிதலில் 14 வயதிற்குட் பட்டோர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றனர்.  தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் 222 சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். பரிசு பெற்ற மாண வர்களை பள்ளிச் செயலர் வரதராஜன், முதல்வர் தீபக், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வராஜ், வினோதினி, சக ஆசிரி யர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

சித்த மருத்துவ நாள் விழா  புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களுக்கு போட்டிகள் அறிவிப்பு

புதுக்கோட்டை, நவ.15 - டிச.22 ஆம் தேதி சித்த மருத்துவ நாளையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான  பல்வேறு போட்டிகளை சித்த மருத்துவப் பல்கலைக்கழக வேண்டுகைக் குழு நடத்துகிறது.  இதுகுறித்து குழுவின் அமைப்பாளர் மருத்துவர் மைக்கேல் செயராசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்கான தலைப்புகள்: 6, 7, 8  வகுப்புகளுக்கு - என் வீட்டைச் சுற்றியுள்ள மூலிகைகள், நாட்டுப்புறப் பாடல்களில் சித்த மருத்துவம், சமூக முன்னேற்றத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு, அன்றாட வாழ்வில் சித்த மருத்துவம். 9,10 வகுப்புகளுக்கு - நல வாழ்வில் தரைக்காடுகளின் பங்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சித்த மருத்துவம், திருக்குறள் காட்டும் சித்த மருத்துவம், நவீன வாழ்வியலும் சித்த மருத்துவமும். 11, 12 வகுப்புகளுக்கு - சித்தர்களின் சமூகப் பணி,  சங்க இலக்கியங்களில் சித்த மருத்துவம், சித்த மருத்துவம் கூறும் நோய்த் தடுப்பு முறைகள், தைலமரத் தோட்டங்களும் தரைக்காடுகளும். கட்டுரைகள் ஏதாவதொரு தலைப்பில் ஏ4 தாளில் அதிக பட்சம் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பள்ளி அளவில் பேச்சுப் போட்டியில் தேர்வு செய்யப்படும் இருவருக்கு, மாவட்ட அளவிலான போட்டி டிச.22 ஆம் தேதி  புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடத்தப்படும்” என தெரி விக்கப்பட்டுள்ளது.

மகிழ் முற்றம் தொடக்க விழா

பாபநாசம், நவ.15 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மகிழ் முற்றம் தொடக்க விழா நடந்தது.  பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். முன்னதாக ஆசிரியை அமுதா வரவேற்றார். இதில் பள்ளி மேலாண்மை குழுத் தலைவி புவனேஸ்வரி, துணைத்  தலைவி கேத்ரின் விமலா, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் பேசினர். பள்ளி மாணவர்கள் 40 பேர் குறிஞ்சி, முல்லை, மருதம்,  நெய்தல், பாலை என 5 குழுவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் மாணவர் தலைவர் தேர்ந்தெ டுக்கப்பட்டு, பொறுப்பாசிரியர் நியமிக்கப்பட்டனர்.  இதில் குழுவாக இணைந்து செயல்படுதல், வேற்று மையில்லாத உறவு, சமூக மனப்பான்மை, தலைமை பண்பு, நேர்மறை எண்ணங்களை வலுவூட்டுதல், ஆசிரியர்  மாணவர் உறவு மேம்படுத்துதல், கற்றல் திறன் மேம்பாடு,  விடுப்பு எடுப்பதை குறைத்தல் ஆகியவை மகிழ் முற்றத்தின் நோக்கமாகுமென பள்ளி தலைமை ஆசிரியர்  ரமேஷ் தெரிவித்தார்.

ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

தஞ்சாவூர், நவ.15 -  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சிப்பணிகள் திட்டம் சார்பில், பிறந்தது முதல் 6 மாதம் வரையிலான குழந்தை கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான “ஊட்டச்சத்தை  உறுதி செய்” திட்டம் ரூ.22 கோடியில் விரிவாக்கம் செய்யப் பட்டு, இரண்டாம் கட்டமாக, அரியலூர் மாவட்டம், வாரண வாசி குழந்தைகள் மையத்தில், முதலமைசர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், பேரா வூரணி ஒன்றியம் கொன்றைக்காடு, சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூக்கொல்லை ஆகிய இடங்களில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பி னர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தாய்மார்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.  இதில் பேராவூரணி ஒன்றியத்தில் 96 பேருக்கும், சேது பாவாசத்திரம் ஒன்றியத்தில் 126 பேருக்கும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. 

ஆலங்காடு நூலகத்தில் கண்காட்சி

முத்துப்பேட்டை, நவ.15 - திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள  ஆலங்காடு கிளை நூலகத்தில் நூலக வார விழாவை யொட்டி நூலகர் சங்கீதா கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார்.  ஆலங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாண வர்களை பொறுப்பு தலைமையாசிரியர் முருகானந்தம் நூலகத்திற்கு அழைத்துச் சென்று கண்காட்சியினை பார்வையிட செய்தார். மாணவர்களுக்கு நூலகத்தில் உள்ள புத்தகங்கள் பற்றியும், வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார். விடுமுறை நாட்களில் மாணவர்கள் நூலகத்திற்கு சென்று புத்தக வாசிப்பை மேற்கொள்வோம் என மகிழ்ச்சியுடன் உறுதி கூறினர்.

தோழர் நா.பாலசுப்ரமணியன்  3 ஆம் ஆண்டு நினைவு தினம்

திருவாரூர், நவ.15 - ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்க மாநிலத் தலைவர், திருவாரூர் சிஐடியு முன்னாள் மாவட்டச் செய லாளர் நா.பாலசுப்ரமணியன் மூன்றாம் ஆண்டு நினைவு  தின கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலா ளர் ஜி.சுகுமாறன் தோழர் நா.சுப்பிரமணியனின் குறித்து நினைவு கூர்ந்தார். கருத்தரங்கில் சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே. என்.அனிபா, மாவட்ட பொருளாளர் இரா.மாலதி, உள்ளாட்சி சங்க மாவட்டச் செயலாளர் எம்.முரளி  ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். சிஐடியு நிர்வாகி கள், உள்ளாட்சி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் கே.சிவசுப்ரமணியன் நன்றி  கூறினார்.

நவ.19 சிறப்பு குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், நவ.15 - பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நவ.19 ஆம் தேதி மாலை  4 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற  உள்ளது. இந்த சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து  கொள்வர். எனவே மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனா ளிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது தேவை களை கோரிக்கை மனுவாக அளிக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் தின விழா: மரக்கன்றுகள் வழங்கல்

தஞ்சாவூர், நவ.15-  பேராவூரணி ஒன்றியம், மதன்பட்டவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரா.முத்துகிருஷ்ணன் முன்னிலையில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கா.சத்யா தலைமையில், குழந்தைகள் தின விழா  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.  பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் ச. இளமதியன், தனது செலவில் மாணவர்கள் அனைவருக்கும் சந்தன மரக்கன்றுகளை வழங்கினார்.  பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியை தி.சூர்யா மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

மகப்பேறு நிதி முறைகேடு: இருவர் மீது நடவடிக்கை

புதுக்கோட்டை, நவ.15-  புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு நிதியுதவித் திட்ட நிதியில் முறைகேடு செய்த இளநிலை உதவியாளர்  வெங்கடேஷ் குமார் இடைநீக்கமும், வட்டாரக் கணக்கு  உதவியாளர் எம். வருண் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். கடியாப்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு அரசின் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் போலிப் பயனாளிகள் பட்டியல் தயாரித்து ரூ.18.60 லட்சம் முறைகேடாக 16 வங்கிக் கணக்குகளில் போடப்பட்டது அண்மையில் நடைபெற்ற தணிக்கையில் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக, இளநிலை உதவியாளர் வெங்கடேஷ்குமார், வட்டாரக் கணக்கு உதவியாளர் வருண் ஆகியோர் மீது மாவட்ட சுகாதார அலுவலர் எஸ். ராம்கணேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் அளித்தார். இதனிடையே, வெங்கடேஷ்குமாரை இடைநீக்கம் செய்தும், வருணை பணி நீக்கம் செய்தும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற இந்த முறைகேடு தொடர்பாக அந்தக் காலகட்டத்தில் பணியாற்றிய வட்டார மருத்துவ அலுவலர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக, சென்னையிலிருந்து கூடுதல் இயக்குநர் 2 நாட்களில் புதுக்கோட்டை வந்து விசாரணை மேற்கொள்ளவுள்ளார் என்றும் அவரது விசாரணையில் தெரியவரும் விஷயங்கள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனவும் சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.