திருவாரூர், நவ.15 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ முன்னிலையில் திருவாரூர் நகராட்சி அலுவல கத்தில் இருந்து, குழந்தைகளுக்கான நடைபய ணம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை நகராட்சி தலைவர் புவனபிரியா செந்தில் துவக்கி வைத்தார். இதில் ஸ்ரீதியாக ராஜா கல்வி நிறுவனத்தின் முதலாமாண்டு மாணாக்கர்கள், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மற்றும் பொதுநல அலுவ லர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீ தியாகராஜா கல்வி யியல் கல்லூரி நிறுவனத்திற்கு இந்நிகழ்வை பாராட்டி நினைவு கேடயம் வழங்கப்பட்டது. பேரணியில், திருவாரூர் கல்வியியல் கல்லூரி களின் முதலாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணாக்கர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டை சர்வதேச குழந்தைகள் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியினை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாவட்ட ஆட்சிய ரகத்திலிருந்து வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.