திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உற்பத்தியாகக் கூடிய நெல் மற்றும் இதர பொருள்களை சேமித்து வைப்பதற்கான 5000 மெட்ரிக் டன் அளவுள்ள சேமிப்பு கிடங்கினை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கா.மாரிமுத்து குத்துவிளக்கு ஏற்றினார். ஒன்றிய குழு பெருந்தலைவர் பாஸ்கர், திமுக நகர செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.