districts

img

மயிலாடுதுறை மாவட்ட நெல் கொள் முதல் நிலையங்களில் மத்தியக்குழு ஆய்வு

மயிலாடுதுறை, ஜன.23-  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருவிளையாட்டம் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் காரீப் கொள்முதல் பருவம் 2024-2025 சம்பா நெல் கொள்முதல் ஈரப்பதம் தளர்வு செய்வது தொடர்பாக மத்திய ஆய்வுக் குழுவினைச் சேர்ந்த உதவி இயக்குநர் (உணவு மற்றும் பொது விநியோகம்) பிரீத்தி, தொழில்நுட்ப அலுவலர் அபிஷேக் பாண்டே ஆகியோர் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  உடன் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மேலாளர் (தரக்கட்டுப்பாடு) செந்தில்குமார், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ)மோகன், வேளாண் துறை இணை இயக்குநர் சேகர், மாவட்ட வழங்கல் அலுவலர் உ. அர்ச்சனா ஆகியோர் உடனிருந்தனர்.  தொடர்ந்து கீழ்மாத்தூர், மேமாத்தூர் பகுதிகளை பார்வையிட்ட மத்தியக்குழு, நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்க்கொண்டனர்.