திருச்சிராப்பள்ளி, ஜூன் 15 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருச்சி மாவட்ட 4 ஆவது மாநாடு லால்குடி பெரியார் மண்ட பத்தில் புதனன்று நடை பெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். தலித் ஒடுக்கு முறை விடுதலை முன்னணி மத்தியகுழு உறுப்பினர் மோகனா துவக்கவுரை யாற்றினார். ஆண்டறிக் கையை தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலா ளர் சுப்பிரமணியன் வாசித் தார். சங்க மாவட்ட துணை செயலாளர் வீரவிஜயன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநி லச் செயலாளர் பழனிச்சாமி, மாநிலக் குழு உறுப்பினர் சந்திரன், மாதர் சங்க புற நகர் மாவட்டச் செயலாளர் மல்லிகா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் நாக ராஜ், சிறுபான்மை நலக் குழு மாவட்டச் செயலாளர் எம்.கே.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாட்டில் சாதி ஆண வப் படுகொலைகளை தடுத்திட தமிழக அரசு உடன டியாக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தலித் கிறிஸ்தவர் களையும் பட்டியல் இன மக்களோடு இணைந்து வேலை வாய்ப்பு, கல்வி மற்றும் அரசு சலுகைகள் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் நிதியுதவி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கிட உரு வாக்கப்பட்ட அமைப்பின் மூலம் வழங்க வேண்டிய நிதியை மனு கொடுத்த அனைவருக்கும் உடனே வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் பஞ்சமி நிலங் களை மீட்டு சம்பந்தப்பட்ட மக்களிடம் வழங்க வேண் டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டில் புதிய நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்ட னர். மாவட்டத் தலைவராக டி.ரஜினிகாந்த், செயலாள ராக ஜெ.சுப்ரமணியன், பொருளாளராக கே.அரு ணன், துணை செயலாளர் களாக எம். வீரவிஜயன், வீரா சாமி, துணை தலைவர் களாக வி.சாரதா, இளங்கோ வன் உள்ளிட்ட 30 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச் செயலாளர் சின்னை.பாண்டியன் நிறை வுரையாற்றினார். முன்ன தாக ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் வரவேற்றார். தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட குழு உறுப்பினர் வினோத் குமார் நன்றி கூறி னார். முன்னதாக என்.வி கலைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.