சென்னை, ஜூலை 30 - கழிவுநீர், மலக்குழிகளில் மனிதர்களை இறக்குவதை சென்னை மாநகராட்சி தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. பெருங்குடி, கல்லுகுட்டை பகுதியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி காளிதாஸ், அவரை காப்பற்ற முயன்ற வீட்டின் உரிமையாளர் சரவணன் ஆகியோர் வெள்ளியன்று (ஜூலை 29) சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முன்னணியின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின், செயலாளர் கே.மணி கண்டன், பொருளாளர் பி.ஆர்.முரளி உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் கூறினர். இது தொடர்பாக முன்னணியின் தென் சென்னை மாவட்டக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருங்குடி சம்பவத்தில் 2 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர் என்று முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், ‘மனிதக் கழிவை அகற்ற மனிதர்களை ஈடு படுத்துவதை தடை செய்யும் சட்டம்-2013’ ன் கீழ் வழக்கு பதியப்படவில்லை. எனவே, முதல் தகவல் அறிக்கையை திருத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சட்டப் படியான இழப்பீட்டை பெற்றுத்தர வேண்டும். அமைப்புகள் தலையிட்டால் மட்டுமே உரிய சட்டப் பிரிவின் கீழ் வழக்க பதிவது சரியல்ல. இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் காவல் நிலையங்களுக்கு உரிய வழிகாட்டு தல்களை வழங்க வேண்டும். புறநகர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படாமல் இருப்பதால்தான் இத்தகைய மரணங்கள் நிகழ்கின்றன. புறநகரில் கடந்த சில மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்டோர் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மரணித்துள்ளனர். இதனை தவிர்க்க பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து அமைக்க வேண்டும். 2013ஆம் ஆண்டு சட்டத்தின்படி, கழிவு களை அகற்றும் வேலைக்கு தனியார் நேரடியாக ஆட்களை ஈடுபடுத்தக் கூடாது. சென்னை மாநகராட்சி மூலம், இயந்திரங் களை பயன்படுத்தியே கழிவுகளை அகற்ற வேண்டும். இதில் தவறு நிகழ்ந்தால், அதற்கு மாநகராட்சி நிர்வாகம்தான் பொறுப்பு. எனவே, இதுவரை நடந்துள்ள அனைத்து மரணங்களுக்கும் மாநகராட்சியே பொறுப் பாகும். இனி ஒரு மரணம் நிகழ்ந்தால் மாநக ராட்சி அலுவலகங்களை முற்றுகையிடு வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.