districts

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடி திருத்த மறுப்பு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

தஞ்சாவூர், டிச.3-  ஒரத்தநாடு அருகே ‘ஊர் கட்டுப் பாடு’ எனக் கூறி தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு முடிதிருத்தம் செய்ய மறுப்பு  தெரிவித்ததாக எழுந்த புகாரில், சலூன் கடைக்காரரை காவல்துறையினர் கைது செய்தனர்.   தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கிளாமங்கலம் தெற்கு தெரு வில், தேநீர் கடையில் இரட்டை குவளை  முறையும், முடித்திருத்தும் கடையில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் பல  ஆண்டுகளாக தீண்டாமை கடை பிடிக்கப்பட்டு வருவதாக தாழ்த்தப் பட்ட மக்களின் சார்பில், ராஜேந்திரன் என்பவர் அண்மையில் ஒரத்தநாடு வட்டாட்சியர் சுரேஷிடம் புகார் அளித் தார். இதையடுத்து வட்டாட்சியர் சுரேஷ்  உத்தரவின் பேரில், கிராம நிர்வாக  அலுவலர் நேரில் ஆய்வு மே கொண்டு, தீண்டாமை கடைபிடிக்கப் படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்தார். அதன் பிறகு வட்டாட்சியர் இது போன்ற சம்பவம் நடக்க கூடாது என கிராம மக்களிடம் எச்சரித்தார். கடந்த நவம்பர் 25-ஆம் தேதி சலூன்  கடையில் முடி திருத்தம் செய்ய சென்ற  போது, அங்கு கடையில் இருந்தவர், ‘‘தாழ்த்தப்பட்டவருக்கு முடி திருத்தம் செய்ய முடியாது’’ என கூறியுள்ளார்.  இதையடுத்து கிராமத்தில் உள்ள சாதி ஆதிக்க வெறியர்கள் ஊர்க்கூட்டம் நடத்தி தாழ்த்தப்பட்டவர்களுக்கு, மளிகைக் கடைகளில் பொருட்கள் வழங்கக் கூடாது, முடிதிருத்தம் செய்யக்கூடாது என கட்டுப்பாடு விதித் துள்ளனர்.  இதுகுறித்து, தாழ்த்தப்பட்டவர்கள் நவம்பர் 28-ஆம் தேதி மாவட்ட ஆட்சி யர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு வாட்ஸ் அப்பிலும், நவம்பர் 29-ஆம் தேதி பாப்பாநாடு காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.  

இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், மளிகை கடையில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பொருட் கள் வழங்காமலும், சலூன் கடையில்  முடி திருத்தம் செய்யாமலும் இருந்தாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து கடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பு வட்டாட்சியர் சுரேஷ் கிளாமங்கலம் கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர், தீண்டாமையை கடைபிடித்ததாக பாப்பாநாடு காவல்துறையினர் வழக்கு  பதிவு செய்து, கிளாமங்கலத்தில் சலூன்  கடை வைத்துள்ள நம்பிவயல் கிரா மத்தை சேர்ந்த வீரமுத்து(41). என்ப வரை கைது செய்ததோடு, மேலும் சிலரிடம் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து அக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர்கள் கூறுகை யில், ‘‘எங்களது கிராமத்தில் பல ஆண்டுகளாக தேநீர் கடையில் எங்க ளது சமூகத்துக்கு தனிக்குவளை வழங்குகிறார்கள். சலூன் கடையில் முடி வெட்ட மறுக்கிறார்கள், மளிகை  கடையில் பொருட்கள் தர மறுக்கிறார் கள். எனவே இதற்கு பின்னால் தீண் டாமை வன்கொடுமையை தூண்டு பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் புகார் அளித்தோம்’’ என்றனர். 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி கள ஆய்வு 
இந்நிலையில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் சத்ய நாதன், மாவட்ட துணைச் செயலாளர் களப்பிரன் ஆகியோர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர்.  தீ.ஒ.முன்னணி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், ஒரத்த நாடு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், திருவோணம் ஒன்றி யச் செயலாளர் பெரியசாமி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.ராமசாமி ஆகி யோர் ஒரத்தநாடு வட்டாட்சியரை சந்தித்து பேசினர்.  அப்போது, அப்பகுதியில் தீண்டா மையை கடைப்பிடிப்பவர்கள் மீது இரக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருட்கள் தர மாட்டோம்  என்று சொல்லக்கூடாது என வலியுறுத் தப்பட்டது.  சாதி ஆதிக்க வெறியர்கள், சார்பு கட்சியினர் கிராமத்தில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்த முயல்கின்றனர். சாதி ஆதிக்கத்தைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருள் கொடுக்க மாட்டோம். வேலையை கொடுக்க மாட்டோம் என கூட்டம் கூட்டி முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.  எனவே, மாவட்ட நிர்வாகம் பிரச் சினையை தூண்டி விடுபவர்கள் மீதும், பின்னால் இருந்து இயக்குபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் பொது  அமைதியை குலைக்கும் விதமாக, சாதி ஆதிக்கத்தைச் சார்ந்த சங்கத்தி னர் கடும் முயற்சி மேற்கொண்டுள்ள னர். அதற்கு இடம் அளிக்காமல் அனைத்து தரப்பு மக்களின் ஒற்று மையை பாதுகாக்கும் விதமாக மாவட்ட  நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தீண்டாமை ஒழிப்பு முன்னணி கேட்டுக் கொண்டுள்ளது.