districts

img

கட்டுமாவடி மீன் சந்தையில் பெரிய கலிங்கமுரல் மீன் விற்பனை

அறந்தாங்கி, ஜன.18 - கட்டுமாவடி மீன் மார்க்கெட்டில் பெரிய கலிங்க முரல் மீன் விற்பனைக்கு வந்தது. இந்த மீன் ஒரு கிலோ  550 ரூபாய்க்கு விற்பனையானது.  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த கட்டுமாவடியில் மிகப்பெரிய மீன் மார்க்கெட் உள்ளது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு அவ்வப்போது பெரிய மீன்களும், அரிய வகை மீன்களும் விற்பனைக்கு வருவது  வாடிக்கையாகும். இந்நிலையில் கணேசபுரத்தைச் சேர்ந்த கோகுல்ராமன் என்பவரது வலையில் 7 பெரிய கலிங்கமுரல் மீன்கள் பிடிபட்டன. இந்த மீன்கள் 3.5 கிலோ முதல் 4 கிலோ வரை எடை கொண்டது. பொது வாக இந்த மீன்கள் இந்த சீசனில் வருவது மிக அரிதாகும்.  ஆனால் மற்ற நாட்களில் அதிகமாக கிடைக்கும். கட்டுமாவடி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த மீன்கள், ஒரு கிலோ ரூ.500 முதல்  550 வரை விற்பனையானது. ஆனால் சாதாரண நாட்களில்  இந்த மீன்கள் ரூ.350 முதல் 400 வரை விற்பனையாகும். தற்போது அரிதாக கிடைத்த இந்த மீன் அதிக விலைக்கு  விற்பனையானது.