புதுக்கோட்டை, ஜன.16- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பொங்கல் பண்டிகையையொட்டி போர்த் தேங்காய் விளையாட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை அடுத்த செரியலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தென்னை விவசாயத் அதிகமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறம் நடைபெறும் போர்க்காய் தேங்காய் விளையாட்டுப் போட்டியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தேங்காய்களை நேருக்கு நேர் மோதவைத்து உடைக்கின்றனர். பல தேங்காய்களை ஒரு சில தேங்காய்கள் மோதி உடைக்கும் நிகழ்வுகள் நடக்கும். இப்போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களுடன் இளைஞர்கள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர். தேங்காய்களை மோதி உடைத்து வெற்றி பெற்ற தேங்காய்களை சாக்கு நிறைய அள்ளிச் சென்றனர். விறுவிறுப்பாக நடைபெறும் இப்போட்டியைக் காண கிராமக்கள் திரண்டு வருவது ஆண்டுதோறும் வழக்கமாக உள்ளது.