மயிலாடுதுறை, நவ.23- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் இலுப்பூர், சின்ன முனி வேலங்குடி மெயின்ரோட் டில் வசிப்பவர் ராஜராஜேஸ் வரி (39). இவரது வீட்டிற்கு பின்புறமிருந்த விவசாய நிலத்தை விலைக்கு வாங் கிய சங்கரன்பந்தலில் கோழிக் கடை நடத்திவரும் சேட்டு என் கிற சாகுல் ஹமீது அந்த இடத்தில் வணிக வளாகக்கட் டிடம் கட்டி வருகிறார். இந்நிலையில், ராஜ ராஜேஸ்வரியின் குடியி ருப்பை காலி செய்யச் சொல்லி தொடர்ந்து மிரட்டியுள்ளார். தனது கணவர் வெளிநாட்டில் வேலைசெய்யும் நிலையில் தனது தாயாருடன் வசிப்ப வரை சாகுல் ஹமீது தனது, பணபலத்தை வைத்துக் கொண்டு மிரட்டுவதாகவும், தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும், 40 ஆண்டு களாக தனது குடும்பத்தினர் வசித்து வரும் வீட்டை மிரட்டி சேட்டு அபகரிக்க முயலுவ தாக மார்க்சிஸ்ட் கட்சியின ரிடம் பாதிக்கப்பட்டுள்ள ராஜ ராஜேஸ்வரி முறையிட்டார், இதையடுத்து அவரை நேரில் சந்தித்த சிபிஎம் மயி லாடுதுறை மாவட்டச் செய லாளர் பி.சீனிவாசன், ஒன்றி யச் செயலாளர் ஏ.ரவிச்சந்தி ரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் ராணி, கிளை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆறுதல் கூறியதோடு, மார்க் சிஸ்ட் கட்சி உங்களுக்கு உறு துணையாக இருக்கும் என் றும், குடியிருப்பை அபக ரிக்க விடமாட்டோம் என்றும் உறுதியளித்தனர்.