அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார் திருச்சிராப்பள்ளி, ஜன.24 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கும் உன்னத திட்டத்தை அறி வித்ததன் அடிப்படையில் திருச்சி மாநக ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 25 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் புதி தாக அமைக்கப்பட்டு 7.5.2022 முதல் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை கள் வழங்கப்பட்டு வருகிறது. நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், மருத்துவர், செவிலியர், சுகாதார ஆய்வாளர். மருத்துவமனை பணியா ளர் என நான்கு பேர் கொண்ட குழுவினர் பணிபுரிவர். காலை, 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இம்மையங்கள் செயல்பட்டு வரு கின்றன. இங்கு புறநோயாளிகள் சிகிச்சை, தொற்றா நோய் (உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் புற்று நோய்) ஆய்வக பரிசோதனைகள், கர்ப்பிணி கள் மற்றும் குழந்தைகள் சிசு பரா மரிப்பு, இளம் சிறார் மற்றும் வளரி ளம் பருவ நலசேவை, குடும்ப கட்டுப் பாடு, தொற்றும் நோய் தடுப்பு, மன நலம் சார்ந்த நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, முதியோருக்கான மருத்துவ சேவை, விபத்து உள்ளிட்ட சேவைகள் அளிக்கப்படுகின்றன. 37 பேர் தேர்வு இச்சேவையை சிறந்த முறையில் வழங்கிடும் வகையில், திருச்சிராப் பள்ளி மாநகராட்சியின் நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் காலியாக உள்ள 4 மருத்துவ அலுவலர்கள், 15 செவிலி யர்கள் மற்றும் 7 மருத்துவப் பணியா ளர்கள் ஆகிய இடங்களுக்கும், அரசு கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரி யும் வகையில் ஒரு லேப் டெக்னிசியன், ஒரு அவசர சிகிச்சை உதவியாளர், 2 மருத்துவமனை உதவியாளர்கள், மேலும் இணை இயக்குநர் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் வகையில் 3 நுண் கதிர் வீச்சாளர், 3 மருத்துவமனை பணியாளர் மற்றும் 1 பாதுகாவலர் என மாவட்ட சுகாதார சங்கம் மூலம் 37 பேர் தேர்வாகினர். இவர்களுக்கு வெள்ளியன்று மாநகராட்சி அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பணி உத்தரவினை வழங்கினார். இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன், நகரப் பொறியாளர் சிவ பாதம், மாநகர நல அலுவலர் விஜய சந்திரன், துணை ஆணையர் பாலு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.