districts

img

விவசாய நிலங்களை மனையாக மாற்றி விற்ற பைனான்ஸ் பாண்டியனை கைது செய்க! விவசாயிகள் சங்கம் சாலை மறியல்

மயிலாடுதுறை, ஜூலை 5 - மயிலாடுதுறை மாப்படுகையில் ஏமாற்று பேர்வழி பைனான்ஸ் ஆர்.பாண்டியனை கைது செய்யக் கோரி  தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாய நிலங்களை சட்டத்திற்கு புறம்பாக மனை பிரிவுகளாக பிரித்து விற்பனை செய்து அரசையும், பொது  மக்களையும் ஏமாற்றி பணமோசடி செய்த புரோக்கர் பைனான்ஸ் ஆர். பாண்டியனை கைது செய்ய கோரி யும், ஸ்ரீ நாராயணபுரம், அவையாம்பாள் புரம், மயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும் மாப்படுகை, சித்தர்காடு ஊராட்சிகள் மற்றும் மயி லாடுதுறை நகராட்சியை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. த.ராயர் தலைமை வகித்தார்.  சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவ ரும் ஓய்வுபெற்ற டிஎஸ்பியுமான எஸ்.ராஜகோபால், அவையாம்பாள்புரம் குடியிருப்போர் சங்கத்தின் தலை வர் டி.கணேசன் உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர். சங்கத்தின் மாநில பொரு ளாளர் எஸ்.துரைராஜ், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன், அனைத்து சமய நிலங்களை பயன் படுத்துவோர் சங்க மாவட்ட மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.விஜய், மாவட்ட துணை செயலாளர் சி.மேகநாதன், விவ சாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் வைரவன், இயற்கை விவசாயி மாப்படுகை அ.ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் விஜயா ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.

மயிலாடுதுறை வட்டம், மாப்படுகை  ஸ்ரீ நாராயணபுரம், பகுதியில் மயிலாடு துறை மயூரநாதர் கோயிலுக்கு மூன்று  கால பூஜைக்காக இனாமாக அளிக்கப் பட்ட நிலங்களை, கூறைநாடு-ஈ.வெ.ரா  தெருவில் வசிக்கும் புரோக்கர் பை னான்ஸ் பாண்டியன் என்பவர் மோசடி செய்துள்ளார். இவர், விளைநிலங்களை எந்த  விதமான அரசு ஒப்புதலும் இல்லாமல்  மனைகளாக பிரித்து ஒரு மனை ரூ. 2  லட்சத்திலிருந்து ரூ.8 லட்சம் வரை என விலை பேசி, சுமார் 400 மனைகளை விற்பனை செய்துள்ளார். அந்த மனை களுக்கு சாலை, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவதாக  மேலும் ரூ.10 ஆயிரத்தையும் மோசடி யாக வாங்கியுள்ளார். ஆனால் மேற் கண்ட அடிப்படை வசதிகள் எதுவும் இது வரை செய்து தரவில்லை.  போலியாக ஆவணங்கள் தயார் செய்து பொது மக்களை நம்பிக்கை மோசடி செய்துள்ளார். ஏமாந்து போன பொதுமக்கள் எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் பல்வேறு இன்னல் களுக்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து  நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நிலத்தை ஏமாற்றி  விற்று பண மோசடி செய்து அரசையும்,  பொதுமக்களையும் ஏமாற்றிய பைனான்ஸ் பாண்டியனை நில அப கரிப்பு-பணமோசடி வழக்கில் கைது செய்ய வேண்டும்.  ஸ்ரீநாராயணபுரம், அவையாம்பாள் புரம், மயூரநாதர் நகர் ஆகிய பகுதி களில் வசித்து வருகிற மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர மறுக்கும், மாப்படுகை, சித்தர்காடு ஊராட்சி மற்றும் நகராட்சியை கண்டித்து மாப் படுகை கேட் அருகில் ஏராளமானோர் கலந்து கொண்ட சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.  புரோக்கர் பைனான்ஸ் பாண்டியன் மீது காவல்துறை தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் அடிப்படை  வசதிகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு புதன்கிழமை அதிகாரி கள் அழைத்துள்ளனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.