நன்னிலம், ஜன.10 - நன்னிலம் வட்டம் சிறுபுலியூர் வருவாய் கிராமம், வல்லங்கிளி கிராமத்தில் பாசன தலைப்பு வாய்க்காலை பல ஆண்டு காலமாக ஆக்கிரமித்து வைத்திருந்த தனியார்களிடம் இருந்து மீட்பதற்கு தற்காலிக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், வல்லங்கிளி கிராமத்தில் வல்லங்கிளி, நாடா குடி, கூரத்தாழ்வார்குடி உள்ளிட்ட பல கிராமங் களுக்கு மேற்கண்ட பாசன தலைப்பு வாய்க்கால் தனியாரின் ஆக்கிரமிப்பில் இருந்ததால், பாசன பணிகளை செய்ய முடி யாமல் இப்பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் பெரும் இழப்பிற்கு ஆளாகி வந்தனர். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற் காக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டிருந்தது. இதற்கான தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், காவல்துறையினரின் முயற்சியால் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நன்னிலம் வட்டாட்சியர் பத்மினி தலை மையில் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சிறுபுலியூர் ஊராட்சிமன்ற தலைவர் இராம.பாஸ்கரன், விவ சாயிகள் சங்க ஒன்றிய தலைவர் எம்.ராம மூர்த்தி, செயலாளர் தியாகு.ரஜினிகாந்த், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி சதீஸ் குமார், சிபிஎம் கிளைச் செயலாளர் கே. கார்த்திக்கேயன், விவசாயிகள் தரப்பில் சி.குமாரசாமி, வை.கணேசன், இரா.மதியழ கன், வீ.ரமேஷ்குமார், வா.பாஸ்கர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். சமாதான பேச்சுவார்த்தையின் முடிவாக, பனங்காட்டாங்குடி கிராமம், புல எண்.140-3, வாய்க்கால் புறம்போக்கில் உள்ள ஆக்கிர மணம் தொடர்பாக கடந்த 7.1.2022 அன்று சரக நில அளவரால் கிராம முக்கியஸ்தர்கள், ஆக்கிரமணதாரர், ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் மனுதாரர்கள் முன்னிலையில் சம்பந் தப்பட்ட அதிகாரிகள், வாய்க்காலை நில அளவீடு செய்து ஆக்கிரமிப்பு பரப்பு அத்து காண்பிக்கப்பட்டு கற்கள் நடப்பட்டுள்ளதை அனைவரும் ஏற்றுக் கொண்டதாக முடிவா னது.
மேலும் பனங்காட்டாங்குடி வாசுதேவன் மகன் பாஸ்கரன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பினை அகற்றிக் கொள்வது தொடர்பாக இருதரப்பினரும் சமாதானமாக உடன்பாடு ஏற்படுத்திக் கொண்ட நிலையில், எதிர்காலத்தில் எவ்வீத மேல்முறையீடும் செய்வதில்லை என்றும் முடிவானது. பழுதடைந்துள்ள மதகினை புதுப்பித்திட நடப்பாண்டில் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள் ளது. அதன்படி மார்ச் மாதத்தில் புதிய மதகு கட்டித் தரப்படும் எனவும், வாய்க்கால் தூர்வாரப்படும் என்றும் பேரளம் பொதுப்ப ணித்துறை உதவி செயற்பொறியாளரால் உறுதியளிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. உடன்பாட்டின் அடிப்படையில் எடுக்கப் பட்ட முடிவுகளை குறிப்பிட்ட கால கெடு விற்குள் நிறைவேற்றுவதோடு மட்டுமல்லா மல் ஏனைய கோரிக்கைகளையும் நிறை வேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பாசன வாய்க்காலுக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றுவதோடு ஏற்கனவே வருவாய்த்துறை யின் ஒப்புதலோடு போடப்பட்டிருந்த கம்பி வேலி, சிமெண்ட் போஸ்ட் உள்ளிட்டவை களை பிரித்தெரிந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அவர்கள் விவசாய பணிகளில் ஈடு படுவதற்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது என கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் தெரிவித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவாக விவசாயிகள் சங்கம் அறிவித்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.