மனிதநேய வார விழாவையொட்டி, திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யு.கரண்கரட் உடனிருந்தார்.