districts

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக சிஐடியு ஒலிமுழக்க ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூலை 7 -

    ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு  மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வியாழனன்று பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்வாரிய உப கோட்ட அலுவலகம் முன்பு ஒலிமுழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  

    பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார்.  தனியார்மயத்திற்கான ஸ்மார்ட் மீட்டர் திட்ட செலவை மின்வாரியத்திடம் திணிக்கக் கூடாது.

   இதனால் ஒரே வீதியில் பல தனியார் நிறுவனங்கள் மின்சார வியாபாரம் செய்ய  நேரிடும். எனவே ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. வட்டச் செயலாளர் பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.