districts

img

சாலைப் பணியாளர்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம்

தேனி, ஜன.10- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  திண்டுக்கல், தேனியில் சாலைப் பணியாளர்கள் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டத்தில் ஈடு பட்டனர்.  5 ஆயிரம் பேரின் வாழ்க்கை யை பறிக்கும் மாநில நெடுஞ் சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட்டு, அரசாணை 140 ஐ ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  தேனி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் அலுவல கத்தில் நடைபெற்ற போராட்டத்தி ற்கு சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணை தலைவர்  பொ. அழகுராஜா துவக்கி வைத்து பேசினார். மேற்கு வட்டக்கிளை செயலாளர் பவுன்ராஜ், கூட்டுறவு ஊழியர் சங்க தலைவர் ரவிக் கமார் ஆகியோர் ஆதரித்து பேசி னர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.முத்துக்குமார் நிறைவு செய்து பேசினார்.  திண்டுக்கல்  திண்டுக்கல்லில்  கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்திற்கு கோட்டத்தலைவர் இராஜா தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ராஜமாணிக்கம் உரையாற்றினார்.  அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி துவக்க வுரையாற்றினார். ஓய்வு பெற்ற அனைத்து சங்கங்களின் கூட்ட மைப்பு மாவட்டத்தலைவர் ஜெய சீலன் நிறைவுரையாற்றினார். கோட்ட நிர்வாகிகள் அருள்தாஸ், வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  மதுரை  தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் வாயில் கருப்பு துணி  கட்டி நூதன முறையில் ஒப்பாரி போராட்டம் மதுரை புதூர் தாமரைத் தொபட்டி அருகில் உள்ள கோட்டப்பொறியாளர் அலு வலகம் முன்பு மாவட்டத்தலைவர் வி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலாளர் த.மனோ கரன் கோரிக்கை விளக்கி பேசி னார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் க. நீதிராஜா துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட செயலாளர் க. சந்திரபோஸ் ஆதரித்துப் பேசினார். சங்க மாநி லப் பொருளாளர் இரா. தமிழ் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் நா. முருகன் நன்றி கூறினார்.