திருவாரூர், பிப்.25- திருவாரூரில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட தலைவர் சகாயராஜ் தலைமையில், மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம், திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தின் கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. முருகையன், மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா, திட்டச் செயலாளர் ராஜேந்திரன், திருவாரூர் திட்டத் தலைவர் குமார், மன்னை கோட்டைச் செயலாளர் வீரபாண்டியன், கோட்டத் தலைவர் மோகனசுந்தரம், திருவாரூர் கோட்டச் செயலாளர் வினோத் மற்றும் மண்டல செயலாளர் தஞ்சாவூர் இராஜராஜன், திட்டப் பொருளாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். சிஐடியு மாவட்ட தலைவர் சீனிவாசன் நிறைவுறையாற்றினார். கிழக்கு கோட்ட செயலாளர் நாகராஜன் நன்றி கூறினார். புதுக்கோட்டை மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டையில் சிஐடியு தொழிற்சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் புதுக்கோட்டை வட்டத் தலைவர் எஸ். சித்தையன் தலைமை வகித்தார். போராட்டத்தை தொடங்கி வைத்து மண்டலச் செயலாளர் எஸ். அகஸ்டின் உரையாற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் க. முகமதலிஜின்னா ஆகியோர் கண்டன உரையாற்றினர். கோரிக்கைகளை விளக்கி வட்டச் செயலாளர் கு. நடராஜன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பேசினர். மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்தக்கூடாது. கொரோனா காலத்தை காரணம் காட்டி நிறுத்தப்பட்ட சரண்டர் விடுப்பு பணப்பயன்களை திரும்ப வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தஞ்சாவூர் தஞ்சாவூர் மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு திட்ட தலைவர் ஏ. அதிதூத மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். திட்டப் பொருளாளர் எஸ்.சங்கர் வரவேற்றார். மண்டலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் துவக்கவுரையாற்றினார். திட்டச் செயலாளர் பி.காணிக்கை ராஜ், ஒரத்தநாடு கோட்டச் செயலாளர் எஸ்.ரவி, தஞ்சாவூர் கோட்டச் செயலாளர் என்.அறிவழகன், பட்டுக்கோட்டை கோட்டச் செயலாளர் எம்.முருகேசன் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் டி. மணிவண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மண்டலச் செயலாளர் டி.கோவிந்தராஜூ நிறைவுரையாற்றினார். மின் ஊழியர் மத்திய அமைப்பின் தஞ்சை நகர கோட்டச் செயலாளர் ஆர்.அரிகேசவன் நன்றி கூறினார். கரூர் கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கரூர் மாவட்ட குழு சார்பில் தர்ணா நடைபெற்றது. சங்கத்தின் கரூர் மாவட்ட தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.தனபால், மாவட்டச் செயலாளர் நெடுமாறன் , இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் பெருமாள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பொன். ஜெயராம், சிஐடியு மாவட்ட துணை தலைவர் எம். சுப்பிரமணியன் போராட் டத்தை நிறைவு செய்து பேசினர்.