திருச்சிராப்பள்ளி, ஜூன் 30- ஒன்றிய மோடி அரசின் 8 ஆண்டு கால வேதனை புகைப்பட கண்காட்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வியாழ னன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் நடை பெற்றது. புகைப்பட கண்காட்சி யில் கடந்த 8 ஆண்டுகளில் மோடி அரசாங்கம் மக்களை வாட்டி வதைக்கும் நடவடிக் கைக்களான பணமதிப் பிழப்பு, பொதுத்துறை நிறு வனமான பிஎஸ்என்எல் ஊழியர்கள் 90 ஆயிரத் திற்கும் மேற்பட்டோரை விருப்ப ஓய்வு கொடுத்து வேலையை விட்டு அனுப்பி யது. தேசிய கல்விக்கொள்கை மூலம் தமிழகத்தில் நடை முறையில் உள்ள இரு மொழி கொள்கைக்கு எதி ராக மும்மொழி கொள்கை யை திணிப்பது. கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் ரூ.30,600 கோடி டெபாசிட் செய்தி ருப்பது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவல நிலையில் 2015 முதல் 2020 வரை இந்தியாவில் 376 பேர் இறந்திருப்பது போன்ற ஏராளமான புகைப் படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டி ருந்தன. இந்நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செய லாளர் லெனின் தலைமை வகித்தார். இதில் நிர்வாகி கள் கிச்சான், சேதுபதி, சோலை, ஜாபர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.