districts

img

திருச்சியில் ரூ.600 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா

திருச்சிராப்பள்ளி, ஏப்.7- தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்  கழகம் (டிட்கோ) மற்றும் தமிழ்நாடு  எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆகிய வற்றின் கூட்டு முயற்சியில் திருச்சிராப் பள்ளியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா (டைடல் பார்க்) அமைக்கப்பட உள்ளது. இது திருச்ச்ராப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங் களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப  வல்லுநர்களுக்கு வரப்பிரசாத மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. சட்டமன்றத்தில தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வியாழக் கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டம்  பஞ்சப்பூரில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில்  10 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.600  கோடி மதிப்பீட்டில் டைடல் பார்க் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார் இது குறித்து ஆட்சியர் எம்.பிரதீப் குமார் கூறுகையில், திருச்சிராப்பள்ளி -மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு சொந்த மான இடம், டைடல் பூங்கா அமை கிறது. நிலத்தை வகை மற்றம் செய்யும்  பணிகள் விரைவில் தொடங்கும் என்றார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு  தொழில்துறையினர் மற்றும் தகவல்  தொழில்நுட்ப சேவை வழங்குநர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள் ளது. இரண்டாம் தலைநகர் எனக் கூறப்படும்  திருச்சிராப்பள்ளியில்  இரண்டாவது தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைகிறது.

 தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தகவல்படி, திருச்சிராப்பள்ளி நாவல்பட்டில் உள்ள  எல்காட் ஐடி பூங்கா அதன் முழுத் திற னுடன் செயல்படுகிறது. ஐடி பூங்கா  1.16 லட்சம் சதுரஅடியில் விரிவுபடுத்தப் படுகிறது.  “ஐடி மற்றும்  தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த அறிவிப்பை வர வேற்றுள்ளனர். நியாயமான சம்பளத் திற்கு பணியாளர்கள் கிடைப்பார்கள்.  வேலைவாய்ப்பு வழங்குபவர்களுக் கும், வேலை தேடுபவர்களுக்கும் நல்ல பலனைத் தரும் என்கிறார் திருச்சி ராப்பள்ளி வர்த்தக மையத்தின் தலை வர் என்.கனகசபாபதி.  திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த   எம்.ஏ.அலீம் கூறுகையில், அமைய வுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்கா திருச்சிராப்பள்ளி மட்டுமல்லாதுரு அதன் அருகாமை மாவட்டங்களின் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும்.   கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைவதன் மூலம் குறைந்தது பத்தா யிரம் பேருக்காவது வேலை வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.