பேராசிரியர்கள் போராட்டம்
திருவாரூர், ஜன.28 - திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி யில் யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ் நாடு அரசு கல்லூரி ஆசிரி யர் கழகத்தின் (TNGCTA) சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு கிளையின் துணைத் தலைவர் முனைவர் வை.ஆறு முகம் தலைமை வகித் தார். மண்டல துணைத் தலைவர் முனைவர் முரு கானந்தம் முன்னிலை வகித்தார். கிளையின் செயலர் முனைவர் தி.நட ராஜன் கோரிக்கையை விளக்கி பேசினார்.
விஏஓ கைது
அரியலூர், ஜன.28- அரியலூர் மாவட்டம் அய்யப்பன் நாயக்கன் பேட்டை கிராமம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் (47). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவ ருக்கு நில அளவை செய்ய வேண்டி பல முறை கிராம நிர்வாக அலுவலரை அணுகி யுள்ளார். நில அளவை செய்ய கிராம நிர்வாக அலுவலர் ரூ.2000 லஞ்சம் கேட்டதாக கூறப்படு கிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத வேல்முருகன் இதுகுறித்து அரியலூர் லஞ்ச ஒழிப்பு போலீசா ரிடம் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில், ரசாயனம் தடவிய 2 ஆயி ரம் ரூபாய் நோட்டுகளை ஏலாக்குறிச்சி கிராமத் தைச் சேர்ந்த வாங்குடி விஏஓ புகழேந்தியிடம் (54), வேல்முருகன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புக ழேந்தியை கையும் களவு மாக கைது செய்தனர். இதுகுறித்து அரிய லூர் லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பா ளர் ஹேமசித்ரா தலைமை யிலான போலீசார் விஏஓ புகழேந்தியிடம் விசா ரணை நடத்தி வருகின்ற னர்.
மீனவர்களுக்கு விழிப்புணர்வு
தஞ்சாவூர், ஜன.28 - தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில், பருந்து கடற்படை வானூர்தியின் சார்பில் மீனவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடத்தப் பட்டது. இராமநாதபுரம் பருந்து கடற்படை வா னூர்தி சார்பில், இராம நாதபுரம் மாவட்டத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை கடல்சார் பாது காப்பு மற்றும் கடலோர விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத னொரு பகுதியாக இந்த வாகனப் பேரணி, தஞ்சா வூர் மாவட்டம், பேரா வூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் துறை முகத்திற்கு வருகை தந்தது. கேப்டன் அர்ஜூன் மேனன் தலைமை யில் கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர். கடலில் ஆபத்தான காலக் கட்டங்களில் மீன வர்கள் கையாள வேண்டி யவை, படகுகளில் அவ சியம் வைத்திருக்க வேண்டியவை, மீனவர் களுக்கு வானிலை குறித்தான தெளிவு ஆகியவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்வில், மல்லிப்பட்டினம் மீன்வளத் துறையினர் மற்றும் ஏராள மான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை
புதுக்கோட்டை, ஜன.28 - புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மஞ்சப்பேட்டை ஊராட்சியில் விவசாய விளைபொருட்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அவர்கள் அளித் துள்ள மனுவில், “புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம் மஞ்சப் பேட்டை ஊராட்சியில் உள்ள விவசாயிகள் நெல், கடலை, வாழை, உளுந்து பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். எங்கள் பயிர்களை இங்குப் பெருகியுள்ள காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறை மூலம் நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடும் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாம்சங் தொழிற்சங்கம் பதிவு: இனிப்பு வழங்கி சிஐடியு கொண்டாட்டம்
தஞ்சாவூர், ஜன.28 - காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் சாம்சங் நிறுவனத்தின் சார்பில் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணி செய்யும் தொழி லாளர்கள் சிஐடியு தொழிற்சங்கம் துவக்கி பதிவு செய்வதற்காக விண்ணப் பித்தபோது சங்கம் பதிவு செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மூன்று மாத காலத்திற்கு மேலாக மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. இவர்களின் போராட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் ஆதரவளித்தன. இதைத் தொடர்ந்து நடை பெற்ற வழக்கில் உயர்நீதிமன்றம் 6 வாரத்திற்குள் சாம்சங் சிஐடியு தொழிற் சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. நீதிமன்ற தீர்ப்பின் கடைசி நாளான திங்களன்று சாம்சங் தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதற்கான நகலை சாம்சங் சிஐடியு தலைவரிடம் தொழிற்சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வழங்கினார். இந்த நிகழ்வு வெற்றி விழாவாக தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, செவ்வாயன்று தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, அரசு போக்கு வரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் காரல் மார்க்ஸ், ராமசாமி, கலிய மூர்த்தி, டாஸ்மாக் சங்கத்தின் தலைவர் மதியழகன், செயலாளர் வீரையன், சாலை போக்குவரத்து சங்க நிர்வாகி பரத்ராஜன், மாட்டுவண்டி சங்க நிர்வாகி கள் கோவிந்தராஜ், சுதாகர், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் துரை.மதி வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சை பழைய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையப் பகுதிகளில் தொழிலாளர்களுக்கும், பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. கும்பகோணம் கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமையகம் முன்பு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன ஸ்தாபகத் தலைவர் ஆர்.மனோகரன், பொதுச் செயலாளர் மணிமாறன், துணைப் பொதுச் செயலா ளர் மகேந்திரன், சங்க பொறுப்பாளர்கள் மாரியப்பன், கார்த்தி, சிஐடியு நகர் ஆட்டோ தொழிற்சங்க கௌரவத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். திருச்சிராப்பள்ளி திருச்சி மலைக்கோட்டை பணிமனை முன்பு முருகன் தலைமையில் நடந்த நிகழ்வில், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் இனிப்பு வழங்கி பேசினார். சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மல்லிப்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய கடற்பசு மீண்டும் கடலில் விடப்பட்டது
தஞ்சாவூர், ஜன.28 - மல்லிப்பட்டினம் அருகே மீனவர் வலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிக்கிய கடற்பசு, மீண்டும் கடலில் விடப்பட்டது. மல்லிப்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவருக்கு சொந்தமான படகில் ஞாயிறன்று அதிகாலை கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் 10 மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது, அவர்களது படகில் அரியவகை கடற்பசு ஒன்று சிக்கியது. இதையடுத்து மீனவர்கள் வளத் துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அந்த கடற்பசுவை பத்திரமாக வலையிலிருந்து மீட்டு, மீண்டும் கடலில் விட்டனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரை பகுதியில் அரிய வகை கடற் பசுக்கள் உள்ளதால், இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் மீனவர் வலையில் 5 அடி நீளம் 400 கிலோ எடை கொண்ட பெண் கடற்பசு சிக்கியதாக மீனவர்கள் தெரிவித்தனர். பின்னர் நாங்கள் வழங்கிய அறிவுரையின்படி, மீனவர்கள் கடற்பசுவை பத்திரமாக மீட்டு, கடலில் விட்டனர். இதை யடுத்து மீனவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மீன வர்களுக்கு விரைவில் வனத்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு, ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். கடந்த 3 நாட்களில் மனோரா, மந்திரிப்பட்டினம், வெளி வயல் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் வலை யில் சிக்கிய ஆமைகள் மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளன. இதுகுறித்து வீடியோ பதிவுகளை வனத்துறைக்கு அனுப்பிய மீனவர்களுக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்பட்டு, ரொக்கப்பரிசு வழங்கப்படும்” என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
புதுக்கோட்டை, ஜன.28 - புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 வட்டாட்சி யர்களை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பணி இடமாற்றம் செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார். விராலிமலை வட்டாட்சியர் ரெ.கருப்பையா, அகதிகள் மறுவாழ்வு தனி வட்டாட்சியராகவும், இங்கிருந்த எஸ். ரமேஷ் விராலிமலை வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் எம்.மார்ட்டின் லூதர்கிங், காவிரி-குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்ட நிலமெடுப்பு தனி வட்டாட்சியராகவும், இங்கிருந்த இரா.பாலகிருஷ்ணன் ஆவுடையார்கோவில் வட்டாட்சி யராகவும் மாற்றப்பட்டுள்ளனர். திருமயம் வட்டாட்சியர் சி.புவியரசன், நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனி வட்டாட்சி யராகவும், இங்கிருந்த வி.ராமசாமி திருமயம் வட்டாட்சிய ராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் ஆணையம் உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.7.98 லட்சம் பட்டுவாடா
தஞ்சாவூர், ஜன.28 - தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உத்தரவின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.7.98 லட்சத்துக்கான இரு காசோலைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டு, பட்டுவாடா செய்யப்பட்டது. கும்பகோணத்தைச் சேர்ந்த சேகர் தனியார் நிறுவ னத்தில் 2012 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சத்துக்கும், ரூ.1 லட்சத்துக்கும் என 2 ஆயுள் காப்பீடு பாலிசி எடுத்தார். இந்நிலையில், அதே ஆண்டில் சேகர் உடல் நலக்குறை வால் காலமானார். இதையடுத்து, சேகரின் வாரிசுதாரர் களான மனைவி மலர்விழி, மகன்கள் சரவணபிரியன், சக்தி பிரியன் ஆகியோர் காப்பீடுத் தொகை கோரி தொடர்புடைய தனியார் நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்தனர். ஆனால், தனியார் நிறுவனம் தொகையை தர மறுத்த தால், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யத்தில் மலர்விழி, சரவணபிரியன், சக்திபிரியன் ஆகியோர் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் மலர்விழி, சரவணபிரியன், சக்திபிரியனுக்கு காப்பீட்டு தொகையாக ரூ.6 லட்சமும், சேவை குறைபாட்டுக்காக ரூ.2 லட்சமும், செலவுத் தொகையாக ரூ.3 ஆயிரமும் வழங்குமாறு ஆணையம் 2015 ஆம் ஆண்டில் உத்தர விட்டது. இதை எதிர்த்து தனியார் நிறுவனத்தினர் மேல்முறை யீடு செய்தனர். இதை ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி விசாரித்து, பாதிக்கப்பட்ட வர்களுக்கு தொகையை வழங்க உத்தரவிட்டனர். இதன்படி, பாதிக்கப்பட்ட வாரிசுதாரர்களுக்கு ரூ. 7,98,064- க்கான இரு காசோலைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், ஜன.28 - தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஜன.30 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை யில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரம், கோரிக்கை மனுக்களை காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து, ஒப்புதல் பெற்று, பின் மனுக்களை அளிக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
பாபநாசம்/பொன்னமராவதி, ஜன.28 - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மாநிலக் கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு பயிற்சி வட்டார அளவில் நடந்தது. பாப நாசம் வட்டார வளமையத்தில் நடந்த பயிற்சியில் பாப நாசம் வட்டாரத்திற்குட்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரி யர்கள் பங்கேற்றனர். முன்னதாக பாபநாசம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகன் பயிற்சி யைத் தொடங்கி வைத்தார். பயிற்சி கருத்தாளர்களாக வழக்கறிஞர்கள் வித்யா, மதன் ஆகியோர் ஆசிரியர் களுக்கு பயிற்சியளித்தனர். பொன்னமராவதி பொன்னமராவதி வட்டார வளமையத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்துதலை தடுத்தல் பயிற்சி நடை பெற்றது. பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் ராமதிலகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் சசிகலா தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நல்லநாகு முன்னிலை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தனபால் குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கினார். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்று நர் முகமது ஆசாத் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி (சடையம்பட்டி) முதுகலை ஆசிரியர் ராஜசேகர பாண்டி யன் ஆகியோர் செயல்பட்டனர்.
பிள்ளையார்பட்டி ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
தஞ்சாவூர், ஜன.28 - தஞ்சாவூர் மாநகராட்சியுடன் பிள்ளை யார்பட்டி ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பிள்ளையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏறத்தாழ 100 பேர் மனு அளித்தனர். பின்னர் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிள்ளையார்பட்டி ஊராட்சியை தனித் தன்மையுடன் ஊராட்சியாகச் செயல்பட அனு மதிக்க வேண்டும். பிள்ளையார்பட்டி கிராமத் தில் விவசாயம் பொய்த்துவிட்டது. வேலை வாய்ப்பு இல்லாததால், கால்நடை வளர்ப்பும், நூறு நாள் வேலையும் மட்டுமே உள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சியுடன் பிள்ளையார்பட்டி இணைக்கப்பட்டால், நூறு நாள் வேலை கிடைக்காது. இதனால், கிராம மக்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே, மாநகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் தஞ்சாவூர் மாநகராட்சியுடன் பிள்ளையார்பட்டி ஊராட்சியை இணைக்கக் கூடாது” என வலியுறுத்தினர்.
சேலத்தில் மாநில கேரம் போட்டி: ஜன.31-இல் கரூர் மாவட்ட வீரர்கள் தேர்வு
கரூர், ஜன.28 - தமிழ்நாடு கேரம் சங்கமும், சேலம் மாவட்ட கேரம் சங்கமும் இணைந்து நடத்தும் 64 ஆவது தமிழ்நாடு மாநில சப்-ஜீனியர் மற்றும் கேடட் கேரம் சாம்பியன்ஷிப் போட்டி பிப்ரவரி 7,8, 9 ஆகிய தேதிகளில் சேலம் ஏவிஎஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கான கரூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி ஜன.31 (வெள்ளிக்கிழமை) அன்று கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. ஆகவே கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள் சப்-ஜீனியர் (U-14, 10.02.2011 அன்றோ அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்), கேடட் (U-12, 10.02.2013 அன்றோ அதன் பின்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்). மாவட்ட தேர்வு போட்டியில் பங்குபெறும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்ட தேர்வு போட்டியில் சிறப்பாக பங்கேற்று, மாநில போட்டியில் சிறப்பாக விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்த வேண்டுமென கரூர் மாவட்ட கேரம் சங்க சேர்மன் எஸ்.மோகனரங்கன், மாவட்ட கேரம் தலைவர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், மாவட்டச் செயலாளர் எம்.சுரேஷ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு கரூர் மாவட்ட கேரம் சங்கப் பொருளாளர் வி.செந்தில்குமாரை 9750991014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.