districts

திருச்சி முக்கிய செய்திகள்

திருச்சி மாநகரில்  1,440 டன் குப்பைகள் அகற்றம்

திருச்சிராப்பள்ளி, ஜன.18 - திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போகிப் பண்டிகை தொடங்கி, மாட்டுப்பொங்கல் வரையி லான 3 நாட்களில் சுமார் 1,440 டன் குப்பைகள் சேகரித்து  அகற்றப்பட்டுள்ளன.  இது தொடர்பாக, திருச்சி மாநகராட்சியின் நகர்நல அலு வலர் விஜய்சந்திரன் கூறுகையில், “போகி பண்டிகை அன்று வீடு, கடைகளை சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை குப்பையில் வீசுவது வழக்கம். தற்போது மாநகராட்சியில் முன்னதாகவே வார்டுதோறும் விழிப்பு ணர்வு ஏற்படுத்தி பழைய பொருட்களை வீடு தேடிச்சென்று  மாநகராட்சி ஊழியர்கள் பெற்றனர். மேலும், குடியிருப்பு வாசிகள் தாமாக முன்வந்து தூய்மைப் பணியாளர்களிட மும், குப்பைகள் பிரிக்கும் மையங்களுக்கும் நேரில்  வந்து கொடுத்தனர். இதனால் வழக்கமாக போகி பண்டி கையில் கூடுதலாக சேகரமாகும் 120 டன் குப்பைகள் வீதிகளில் குவிந்து கிடப்பது தவிர்க்கப்பட்டது. மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் நாளொன் றுக்கு 460 முதல் 470 டன் குப்பைகள் சேகரமாகும். பண்டிகை நாட்களில் கூடுதலாக 20 டன் சேர்ந்துவிடும். இந்த ஆண்டு பொங்கலுக்கு பிரத்யேகமாக நியமிக்கப் பட்ட 250 தூய்மைப் பணியாளர்கள் இரவு, பகல் என  பணி செய்தனர். இதில் காய்கனி கழிவுகள், வாழைக் கழிவுகள், பழச்சந்தை கழிவுகள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்கள், விற்பனை ஆகாமல் சேகரமான  கழிவுகள் என நாள் ஒன்றுக்கு கூடுதலாக 20 டன் குப்பை கள் சந்தைப் பகுதிகளில் இருந்து சேகரித்து அகற்றப் பட்டன.  ஒருநாள்கூட தொய்வின்றி போகி பண்டிகை முதல்  மாட்டுப் பொங்கல் வரை தொடர்ந்து 3 நாட்களில் சராசரி யாக 470 டன் முதல் 480 டன் வரை என மொத்தம் 1,440  டன் குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டன” என்றார்.

பள்ளி கட்டடத்தின் 3 ஆவது மாடியிலிருந்து கட்டுமானத் தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

திருவாரூர், ஜன.18 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அகர  ஓகையில் இயங்கி வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் பழுது  நீக்கம் செய்வதற்காக பொதுப் பணித்துறை மூலம் ரூ.6 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை  5 மணியளவில் கட்டிடத்தின் 3 ஆவது மாடியில் கை இயந்திரம் மூலம் கட்டிட இடிப்பு  பணியில், செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்த  கட்டிட தொழிலாளி ராஜ்குமார் (36) என்ப வர் ஈடுபட்டிருந்தார். அப்போது, நிலை தடு மாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே  ராம்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக ராஜ்குமாரின் அண்ணன் ராதா, குடவாசல் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் படி, குடவாசல் காவல் ஆய்வாளர் மணி மாறன் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.  மூன்றாவது மாடியில் பழுது நீக்கும் பணியின் போது உரிய பாதுகாப்பு ஏற்பா டுடன் ஒப்பந்ததாரர் பணியில் ஈடுபடுத்தி  இருந்தால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக் காது. உரிய பாதுகாப்பு வசதி இல்லாம கட்டிட வேலையில் ஈடுபட்டதால் இவ்விபத்து  நிகழ்ந்துள்ளது. எனவே விபத்தில் உயிரி ழந்த குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடும் அவ ரின் மனைவிக்கு அரசு வேலையும் வழங்க  வேண்டும் என அவரது குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குட வாசல் அலுவலகம் வந்து தலைவர்களிடம் முறையிட்டனர்.  ரூ.2 லட்சம் இழப்பீடு: ஒப்பந்ததாரர் உறுதி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக் கையை ஏற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.சுந்தர மூர்த்தி, கே.பி.ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் எம்.கலைமணி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.  அதில், உயிரிழந்த ராஜ்குமார் குடும்பத் தினருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சம் தருவ தாக ஒப்பந்ததாரர் உறுதியளித்தார். இதனை யடுத்து திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு  உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்ட  உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்ட னர். மறைந்த ராஜ்குமாரின் இறுதி நிகழ்ச்சி  சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தர மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். கட்டிடத் தொழிலாளி ராஜ்குமாருக்கு வேம்பு (30)என்ற மனைவியும், ஒரு வயதில்  பெண் குழந்தையும், 4 ஆம் வகுப்பு படிக்கும்  பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத ஒன்றிய பாஜக அரசுக்கு கண்டனம்
ஜன.26 தஞ்சையில் டிராக்டர் பேரணி

தஞ்சாவூர், ஜன.18 -  விவசாயிகள் விரோத, தொழி லாளர் விரோத, மோடி தலைமையி லான ஒன்றிய பாஜக அரசு குறைந்த பட்ச ஆதார விலையை சட்டமாக்கு தல், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெற  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன.26 குடியரசு தினத் தன்று டிராக்டர் மற்றும் வாகனப் பேரணி நடத்துவது என தஞ்சையில் நடை பெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி  மற்றும் அனைத்து தொழிற்சங்கங்க ளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு  செய்யப்பட்டது.  தஞ்சாவூர் ஆற்றுப் பாலம் அருகில் உள்ள சரோஜ் நினைவரங்கத்தில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி  மற்றும் அனைத்து தொழிற்சங்கங்க ளின் ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக் கிழமை மாலை ஐக்கிய விவசாயிகள் முன்னணி தஞ்சை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் என்.வி.கண்ணன் தலை மையில் நடைபெற்றது. விவசாய சங்கப்  பிரதிநிதி வீரமோகன் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில், “தில்லியில் கடந்த ஓராண்டுகளுக்கு மேல் நடைபெற்ற விவசாயிகளுடைய உறுதியான போராட்டத்தில் மூன்று வேளாண் சட்டங் களை திரும்பப் பெறுவது என்று ஒன்றிய அரசு உறுதிமொழி அளித்தது.  ஆனால் தற்போது வேறு வடிவத்தில்  மூன்று வேளாண் சட்டங்களை அமல் படுத்துவது என்று தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கொள்கை திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன் மொழிந்துள்ளது. விவசாயிகளுக்கு எதிரான இந்த சந்தைப்படுத்துதல் திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.  குறைந்தபட்ச ஆதார விலையை சட்டமாக்க வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். விவசாயிகளின் கோரிக் கைகளை முன்வைத்து உடனடி தீர்வு காண வேண்டி 50 நாட்களாக பஞ்சாப் எல்லையில் உண்ணாவிரதம் இருந்து  வருகின்ற விவசாய சங்கத் தலைவர்  ஜக்சித்சிங் தலேவால் உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டு வர, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.  கிரேட்டர் நொய்டாவில் சிறையில்  உள்ள விவசாயிகளை விடுவிக்க  வேண்டும். வயதான விவசாயிகளுக்கு  ஓய்வூதியம் வழங்க வேண்டும். மின்சார  மானியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புதிய மின்சார சட்டத்  திருத்தம் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் விரோத நான்கு சட்டத்  தொகுப்புகளை திரும்பப் பெறுவது, மூன்று குற்றவியல் சட்டங்கள் மற்றும்  புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்றிய  மோடி அரசைக் கண்டித்து, ஜன.26 அன்று நாடு தழுவிய டிராக்டர் மற்றும் வாகனப் பேரணி நடத்த ஐக்கிய விவ சாய முன்னணி அறைவல் விடுத்தது. இதை ஏற்று, தஞ்சாவூரில் ஜன.26  அன்று மாலை 3 மணிக்கு தொல்காப்பி யர் சதுக்கத்திலிருந்து மாபெரும் பேரணி புறப்பட்டு, சிவகங்கை பூங்கா வந்தடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடத்துவது என்று ஐக்கிய விவசாய முன்னணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தஞ்சை அறிவுசார் மையத்தில்  அரசு போட்டித் தேர்வுக்கு  இலவச பயிற்சி

தஞ்சாவூர், ஜன.18 -  தஞ்சாவூர் அறிவுசார் மையத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி துவங்க உள்ளது. ஆர்வமுள்ளோர் பங்கேற்க வேண்டும் என மையத்தின் மதியுரைஞர் பேராசிரியர் முனைவர் வெ.சுகுமாரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்திலேயே முதன்மை முயற்சியாக அரசுத் தேர்வு எழுத இலவச பயிற்சியை வழங்கி வரும் தஞ்சாவூர் அறிவுசார் மையத்தில் குரூப் 1, 2, 4-க்கான அடுத்தக் கட்ட பயிற்சி ஜன.20 (திங்கள்கிழமை) தொடங்க உள்ளது.  முன்னர் நடந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயின்றவர்களில் 25-க்கும் மேற்பட்டோர் பல தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசுப் பணியில் சேர்ந்துள்ள நிலையில், இந்த முறை அதிகப்படியான போட்டித் தேர்வர்கள் ஆர்வமுடன் பயிற்சியில் சேர்ந்து வருகிறார்கள். மிகவும் தரமான பயிற்றுநர்களைக் கொண்டு இலவசமாக வழங்கப்படும் இந்தப் பயிற்சியை தொடங்கிட, மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வழிகாட்டலில், மாவட்ட வருவாய் அலுவலர்  தெ.தியாகராஜன், மாநகர ஆணையர் கண்ணன், கோட்டாட்சியர் செ.இலக்கியா உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர்.  மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த இலவச பயிற்சியானது கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சென்றடைய வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் 100 இடங்களில் அமைந்துள்ள இந்த அறிவுசார் மையங்களில் தஞ்சாவூரில் உள்ள மையத்தில்தான் இத்தகைய தொடர் பயிற்சி நடைபெற்று வருகிறது. கணினிகள், இணையதள வசதி, படிக்க-பயிற்சி பெற, தேர்வு எழுத, உணவு உண்ண, ஓய்வெடுக்க, செய்தித்தாள் வாசிக்க, வழிகாட்ட என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள இந்த மையம் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் அறிவுசார் மையத்தில் அரசுத் தேர்வுக்கான தொடர் மாதிரி இலவச பயிற்சி போட்டித் தேர்வுகளை நடத்தி ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் இறுதியாண்டு பயில்பவர்கள், படித்து முடித்து நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் அறிவுசார் மையத்தில், ஜன.20 அன்று பிற்பகல் 1.30 மணியிலிருந்து 5.30 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் நடைபெற உள்ள தமிழ்நாடு அரசின் குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம்” என கூறப்பட்டுள்ளது.