districts

img

‘நீர்நிலைத் தெய்வங்களும் சமூக மரபுகளும்’ நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர், நவ.8 -  தமிழ்நாடு அரசு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு தமிழ்ப் பண்பாட்டு மரபுகளை ஆய்வு செய்வதற்கு ரூ.2.11 லட்சம் ஒதுக்கி யது.  அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக தென் தமிழ்நாட்டில் உள்ள குளங்கள், ஏரிகள்,  கண்மாய்களின் கரைகளில் குடிகொண்டுள்ள  நீர்நிலைத் தெய்வங்கள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட்டன. நீர்நிலைகளோடு இருக்கக்  கூடிய வளங்களுக்கும், பயிர்களுக்கும், மடை களுக்கும் கரையோரங்களில் இருக்கக் கூடிய மரங்களுக்கும் இடையே பல சமூகத்  தொடர்புகள் நுணுக்கமாக உள்ளன.  நீர்நிலைகளில் கரைகளில் இருக்கக் கூடிய தெய்வங்கள் கரைகளைப் பாது காப்பதோடு மனிதர் களைப் பாதுகாக் கின்றன. இந்தத் தரவு களை யெல்லாம் கள ஆய்வின் வழியாகச்  சேகரித்து தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியின் இணைப் பேராசிரியர் முனைவர்  இரா.வெங்கடேசன் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.  அவர் எழுதிய, ‘நீர் நிலைத் தெய்வங் களும் சமூக மரபுகளும்’ நூல் வெளியீடு பல்கலைக்கழகத்தில் வியாழனன்று நடை பெற்றது. தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வி. திருவள்ளுவன் நூலை வெளியிட,  பதிவாளர் (பொ) பெ.இளையாப்பிள்ளை பெற்றுக் கொண்டார்.