districts

போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

திருவாரூர், மே 5- ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப் பணித் தேர்வுகள், பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள், வங்கித் தேர்வுகள், ரயில்வே வாரியம் நடத்தும் தேர்வுகள், சீருடை பணி தேர்வு கள் என பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன.  இதற்கு தயாராகும் ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் கல்வி தொலைக் காட்சியில் போட்டித் தேர்வுகளுக்கென தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் வாயிலாக தனி அலைவரிசை ஏற்படுத்தி போட்டித்  தேர்வுகளுக்கான பாடங்கள் ஒளிபரப்பப் படும் என தமிழக முதல்வர் அறிவித்தி ருந்தார். இதனைத் தொடர்ந்து, மார்ச் 20-ல் கல்வி தொலைக்காட்சியில் போட்டித் தேர்வுக ளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப் பட்டன. கிராமப் புறங்களில் உள்ள போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் ஆர்வலர்கள் நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள இய லாத நிலையில், தங்களின் இருப்பிடங்களி லிருந்து கொண்டே போட்டித் தேர்வுக்கு தயார்படுத்தி கொள்வதற்காக இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.  தினசரி காலை 7 மணி முதல் 9 மணி  வரையிலும், இதன் மறு ஒளிபரப்பு இரவு 7  மணி முதல் 9 மணி வரையிலும் ஒளிபரப்பப் படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வுக்கு தாயாராகிறவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.