திருத்துறைப்பூண்டி, ஜூலை 17 - திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகரத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் தினமும் உள்நோயாளி யாகவும் புறநோயாளிகளாகவும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருந்து மாத்திரை பற்றாக்குறை என்பது தொடர்ந்து நீடிக்கிறது. ஏழை-எளிய, கிராமப்புற நோயா ளிகள் பயன்பெறும் வகையில் இந்த மருத்து வமனை செயல்பட்டு வரும் நிலையில், இது போன்ற பிரச்சனையால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். பொது மக்களின் இந்த கோரிக்கையை ஏற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர குழு சார்பில் தலைமை மருத்துவர் சிவகுமாரிடம் நோயா ளிகளுக்கு தேவையான மருந்து மாத்திரை களை இருப்பு வைக்க வேண்டும். நாய்க்கடி போன்ற அத்தியாவசிய மருந்துகளை கூடுத லாக கையிருப்பு வைக்க வேண்டும். எலும்பு மற்றும் முட நீக்கியல் மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகரச் செயலாளர் கே.கோபு தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாமி நாதன், கே.வி.ராஜேந்திரன், முத்துப்பேட்டை ஒன்றியச் செயலாளர் கே.பழனிச்சாமி மற்றும் நகர குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.