districts

img

ஓய்வு பெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்க முறையை கைவிடுக! ஊராட்சித் துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.20- தமிழக அரசின் வழி காட்டுதலுக்கேற்ப, ஓய்வு பெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் என்ற நடை முறை முற்றிலும் கைவிடப் பட வேண்டும். ஓய்வு பெறும் நாளுக்கு 3 மாதங்களுக்கு முன்னரே ஒழுங்கு நடவ டிக்கைகளுக்கு உரிய தீர்வு  காணும் வகையில் விரைவு  நடவடிக்கை மேற்கொள் ளப்பட வேண்டும். அரசு முதன்  மைச் செயலாளர் (மற்றும்)  ஊரக வளர்ச்சி ஆணையர்  தலைமையில் 3 மாதங்க ளுக்கு ஒரு முறையும், மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2 மாதங்களுக்கு ஒரு முறை யும் சீரான இடைவெளியில் ஓய்வூதியர் குறைதீர் கூட் டத்தினை நடத்தி நிலுவை இனங்கள் மீது தீர்வு காணப்  பட வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவ லர்களின் ஊதிய நிர்ணயம் தொடர்பான அரசாணை (நிலை) எண்.417/நிதி (ஊதி யப் பிரிவு) 12.11.2020-ல் உள்ள குறைபாடுகளை களைந்து அனைவருக்கும் பயனளிக்கிற வகையிலும், ஓய்வூதியப் பலன்களுக்கு தனி ஊதியத்தை சேர்த்து கணக்கிடும் வகையிலும், திருத்திய ஆணைகள் வெளி யிட வேண்டும். 1.1.2016-க்குப் பின்னரும் தனி ஊதி யத்தை ஆண்டு ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியப் பயன் கள் கணக்கிட எடுத்துக் கொள்ள வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதி யர்கள் சங்கம் சார்பில் திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு செவ் வாய்க்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற் றது.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.தமிழ்செல்வன் தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். மாவட் டத் துணைத் தலைவர் அ. ரெ.மூர்த்தி, மாநில தணிக் கையாளர் எஸ்.புஸ்மநாதன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி உரையாற்றினர். சங்க உறுப்பினர்கள் பலர்   ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.