districts

img

சாரநத்தம் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்யக் கோரி சிபிஎம் சாலை மறியல்

குடவாசல், நவ.25-  திருவாரூர் மாவட்டம் சிபிஎம் வலங்கைமான் ஒன்றியச் செயலாளர் என்.இராதா மீது களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான அவதூறுகளை பரப்பி வரும் சாரநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ராஜராமனை உடனடி யாக கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம் சாரநத்தம் ஊராட்சியில் அடிப்படை வசதி களை கூட நிறைவேற்றவில்லை என்றும், செயல்படாத சாரநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெயராமனை தகுதி நீக்கம் செய்திடவும், ஊராட்சி மன்றத் தலை வருக்கு துணை போகும் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித் தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் ஒன்றியச் செயலாளர் என்.ராதா  தலைமையில் நவம்பர் 30-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது.  இந்த நிலையில், சாரநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ராஜாராமனின் தூண்டு தலின் பேரில், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் என்.ராதாவை களங்கப்படுத்தும் வகையில் சாரநத்தம் பகுதியில் நோட்டீஸ் அடித்து ஒட்டி உள்ளது. இதனை கண்டித்து வேடம்பூர் நீடாமங்கலம் சாலையில், ஒன்றியக் குழு உறுப்பினர் ஜெ.ஜெயராஜ் தலைமையில் கிளை செயலாளர்கள் முன்னிலையில சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வலங்கைமான் துணை ஆய்வாளர் காம ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.  இதனையடுத்து வலங்கைமான் ஒன்றிய செயலாளர் என்.ராதா கூறும் போது திட்டமிட்டபடி நவம்பர் 30-ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றார்.