திருத்துறைப்பூண்டி, ஜூலை 6- திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி சரகத்திற்கு உட் பட்ட பெரிய சிங்களாந்தி கிரா மத்தில் வசித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செய லாளர் நடராஜன் மற்றும் பெரிய சிங்கிளாந்தி கிராம பெண்களை மீது அசிங்கமாகவும் அவதூறாகவும் பேசி கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பல் மீது புகார் கொடுத் தும் இதுவரை நடவடிக்கை எடுக் காத திருத்துறைப்பூண்டி காவல் துறையை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 6 அன்று காவல்நிலையத்தை முற் றுகையிடும் போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, கே. தமிழ்மணி, மாவட்டக்குழு உறுப்பினர் டி.சுப்பி ரமணியன், எஸ்.சாமிநாதன், நகர செயலாளர் கே.கோபு ,ஒன்றிய செயலாளர் டிவி.காரல் மார்க்ஸ் , நகர்மன்றத் துணைத் தலைவர் எம் ஜெயபிரகாஷ், விவசாயிகள் சங்க நகரத் தலைவர் தமிழ்மணி உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கு வந்த காவல் துறை துணை கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். உட னடியாக ஜம்பு என்கிற சாம்பசிவம் என்பவரை கைது செய்தனர். இன் னும் ஒன்பது பேரை விரைவாக கைது செய்வதாக உறுதியளித்த னர். இதனால் போராட்டம் தற் காலிகமாக கைவிடப்பட்டது.