மன்னார்குடி:
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்ததலையாமங்கலம் மக்கள் முன்னாள் ஊராட்சித் தலைவர் பாசறை ராஜேந்திரன் தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சோழபாண்டி, ராஜகோபாலபுரம் ஆகிய கிராமங்களில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் சுமார் 3.4 கோடி ரூபாய் அளவிற்கு அதிர்ச்சியளிக்கும் மோசடி நடைபெற்றுள்ளது. மொத்தம் 225 பயனாளிகளில் சுமார் 200 பயனாளிகளுக்கு இத்திட்டத்திற்கான நிதி தலா ரூ.1.7 லட்சம் சென்று சேரவில்லை. மாறாக போலியாக உருவாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இத்திட்ட நிதி செலுத்தப்பட்டு, பின்னர் இத்தொகை கள்ளத்தனமாக பல தவணைகளில் எடுக்கப்பட்டுள்ளது என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்தவர்களின் பெயரிலும் மோசடி
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் தாங்கள் பயனாளிகள் என்பதும் ஏமாற்றப் பட்டவர்கள் என்பதும் தலையாமங்கலம் மக்களில் பெரும்பாலானோருக்கு தெரியவில்லை என்பதுதான் கள விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல். கஜா புயல் நிவாரணத்தின் போதும் தூய்மை இந்தியா தனிநபர் கழிப்பறை திட்டத்தின் போதும் மக்கள் அளித்த ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்றவற்றை பயன்படுத்தியும் புறம்போக்கு நிலத்தில் வா
இதுகுறித்து முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாசறை ராஜேந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம் கூறுகையில், இந்தஊழலை முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவித்தும் ஏமாற்றப்பட்ட மக்களை அணி திரட்டுவதில் ஈடுபட்ட முன்னாள் தலையாமங்கலம் ஊராட்சியின் தலைவரும் மதிமுக ஒன்றிய செயலாளருமான மாசிலாமணி மற்றும் அவரது உறவினர் எஸ்.பிரபாகர் மீது நான்கு பிரிவுகளில் தலையாமங்கலம் காவல் நிலையத்தில் பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. சம்பந்தமே இல்லாமல் மாசிலாமணி சகோதரர் ராஜகுரு மீதும் பொய் வழக்கு போடப் பட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ளவர்கள் பெயரிலும் முறைகேடு
இதுமட்டுமின்றி தூய்மை இந்தியாதிட்டத்தில் தனி நபர் கழிப்பறை கட்டும்திட்டத்திலும் மோசடி நடைபெற்றுள்ளது. நூறு நாள் வேலை திட்டத்தில் வெளிநாட்டில் உள்ளவர்கள் பெயராலும் ஊழல் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தனர்.இந்த மோசடி அம்பலப்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் உதவி திட்ட அலுவலர் பொன்னியின் செல்வன் தலைமையில் அதிகாரிகள் தலையாமங்கலம் கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்திவருகின்றனர். 2016-2017 நிதியாண்டிலும் அதற்கு பின்னரும் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த மெகா மோசடிகளில் சில, அதிகாரிகளின் தொடர்போடு தலையாமங்கலத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. (ந.நி)