tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

தேவையற்ற செடி, கொடிகளை  அகற்ற கோரிக்கை

பாபநாசம், ஜூலை 24-  கும்பகோணம் - தஞ்சாவூர் முக்கிய நெடுஞ்சாலையில், சாலையின் இருபுறமும் செடிகள் மண்டி போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.  தேவையற்ற செடிகளை வெட்டி அப்புறப்படுத்துவதுடன், வரிசையாக உள்ள பனை மரங்களில் மண்டியுள்ள கொடிகளையும் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மேலும், சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப் படுகின்றன.  இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுற்றுச்சூழலும் மாசுபடுகிறது.உரிய நடவடிக்கையை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை வைக்கின்றனர்.

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை

திருநெல்வேலி ,ஜூலை 24- மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 270 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  இதனால் முண்டந்துறை புலிகள்  காப்பகம்,களக்காடு காப்பகம், அம்பாசமுத் திரம் வனக்கோட்டம், அம்பா சமுத்திரம் வனச் சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து கடுமை யாக அதிகரித்து இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி  வியாழக் கிழமை முதல் மணிமுத்தாறு அரு விக்கு சூழல் சுற்றுலா விற்கு வருகை தரும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பார்வையிட தடையே தும் இல்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தோழர் எல்.ஐ.சி பார்த்திபன் காலமானார்

கும்பகோணம், ஜூலை 24-  கும்பகோணம் வட்ட எல்.ஐ.சி லிகாய் சங்கத்தின் முன்னாள் பொருளாளரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாச்சியார்கோவில் கிளைச் செயலாளரும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க  நாச்சியார்கோவில் கிளை பொருளாள ருமான தோழர் எல்.ஐ.சி. கே. பார்த்தி பன்(48) மாரடைப்பால் காலமானார்.  அவரது மறைவுச் செய்தி அறிந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்  செயலாளர் சின்னை பாண்டியன், செயற்குழு உறுப்பினர் ஜெயபால், அருளரசன் மாவட்டக் குழு உறுப்பினர் பழனிவேல், கண்ணன், செந்தில்குமார், தமுஎகச மாநிலச் செயலாளர் களப்பிரன், மாவட்டச் செய லாளர் விஜயகுமார், லிகாய் கும்பகோ ணம் வட்டப் பொறுப்பாளர்கள் தமிழ்ச்செல்வன், சங்கர், கலியமூர்த்தி, லிகாய், தமுஎகச, மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த தோழர் பார்த்திபனுக்கு புனிதா என்கிற மனைவியும், கமலி, சாதனா என இரு பெண் குழந்தைகளும், சுசிதரன் என்ற  ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.    தோழர் பார்த்திபனின் இரு கண்க ளும் தானமாக கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.