districts

img

தூய்மைப் பணியாளர் மீது தாக்குதல்: பேரூராட்சித் தலைவரின் கணவரை கைது செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம்

தென்காசி, ஜன.  17  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பேரூராட்சியில் தூய்மைப் பணியா ளர்களாக இசக்கிமுத்து, அஜித்குமார் பணிபுரிந்து வருகின்றனர் .இவர்கள் இருவரும் திங்கள்கிழமை அன்று இரவு மார்க்கெட் பகுதியில் சேக ரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டுவ தற்கு குப்பை கொட்டும் இடத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா வின் கணவர் மோகன்லால் எதிரில் வந்து இசக்கிமுத்துவை ஜாதியின் பெயரைச் சொல்லி திட்டியதோடு அவரை சராசரியாக தாக்கினார். மேலும் அவருடன் பணிபுரிந்த அஜித் குமாரையும் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து கேள்விப் பட்ட பேரூராட்சி தூய்மை பணியாளர் கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை அன்று காலையில் பணிக்குச் செல் லாமல் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் .சம்பவம் குறித்து கேள்விப்பட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி ,திராவி டர் கழகம், திராவிடர் தமிழ் கட்சி ,மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.  காவல்துறையும் சம்பவ இடத்தி ற்கு வந்தது . பேரூராட்சி தலைவரின் கணவரால் தாக்கப்பட்ட இருவரின் சார்பில் இசக்கிமுத்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் பேரூராட்சித் தலைவரின் கணவர் மீது புகார் கொடுத்துள்ளார் .புகாரின் பேரில் தென்காசி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இசக்கி முத்து, அஜித்குமார் இருவரிடமும் விசாரணை நடத்தினார் 

திருநெல் வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இருவரிடமும் விசார ணை நடத்தினார். தொடர்ந்து காவல் துறை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.  பட்டியலின மக்கள் தாக்கப் பட்ட சம்பவம் குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் பாலு கூறுகையில் ஆலங்குளம் பேரூராட்சி தலை வரது கணவரால் தாக்கப்பட்ட இசக்கி முத்து காது வலி காரணமாக மேல் சிகிச்சைக்காக தென்காசி மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளார் அஜித்குமார் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளார். இருவர் மீதும் சாதியின் பெயரைச் சொல்லி கொடூரமாக தாக்கிய பேரூ ராட்சித் தலைவரின் கணவர் மீது ஆலங்குளம் காவல்துறை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  இந்த போராட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் சின்னசாமி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணை தலைவர் பாலு ,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி ,ஆதித்தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் புதிய ஆதவன் ,தமிழ் புலிகள் கட்சி யின் ஒன்றிய செயலாளர் தமிழ் குமார், திராவிட தமிழர் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்