சேலம், மார்ச் 19- சேலம் அரசு மருத்துவமனை யில் ஒப்பந்த அடிப்படையில் பணி யாற்றும் துப்புரவு ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் வழங்கா ததை கண்டித்து வியாழனன்று உள்ளிருப்பு போராட்டம் நடை பெற்றது. சேலம் அரசு மோகன் குமார மங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினந் தோறும் ஆயிரக்காணக்கான பொதுமக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு ஒப்பந்த அடிப்படையில் 300க்கும் மேற்பட் டோர் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ரூ.7,700 மாத ஊதியமாக வழங்கப்பட்டு வரு கிறது. இவர்களுக்கு கடந்த மாதத்திற்கான சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் இத்தொழிலாளர்கள் குடும்பம் நடத்த முடியாமல் கடும் நெருக்க டிக்கு ஆளாகினர். இவர்களை பணியில் அமர்த்தியுள்ள ஆந்தி ராவை சேர்ந்த தனியார் நிறு வனம், தமிழக அரசிடம் இருந்து ரூ.40 கோடி வரவில்லை எனவும், அரசு வழங்கியவுடன் அனைவருக் கும் சம்பளம் வழங்கப்படும் என வும் கூறியுள்ளனர். இந்நிலையில், வியாழனன்று பணிக்கு வந்தவர்களும், இரவு பணியில் ஈடுபட்டவர்களும் என சுமார் 200க்கும் மேற்பட் டோர் வேலைக்கு செல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தின் அரு கில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், மருத்துவமனை கழிவறை கழுவுவ தில் இருந்து நோயாளிகளை ஸ்டெரச்சரில் வைத்து கொண்டு செல்வது வரை அனைத்து அடிப் படை வேலைகளையும் செய்து வருகிறோம். எங்களுக்கு மாதம் ரூ.7,700 சம்பளம் வழங்கப்படுகி றது. இந்நிலையில், கடந்த மாதத் திற்கான சம்பளம் இன்னும் வழங் கப்படவில்லை. இதனை உடனடியாக வழங்கிளால் தான் பணிக்கு செல்வோம் என்றனர். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், அரசி டம் இருந்து ஒப்பந்ததாரருக்கு ரூ.40 கோடி வழங்கவில்லை என கூறினார்கள். தற்போது உள்ள தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டது. வேறு ஒரு நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது எனத் தெரிவித்த னர். இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்த ஊழியர்களிடம் பேசினார். உங்களுக்கு சம்பளம் வழங்கப்ப டும் என தெரிவித்தார். ஆனால் ஒப்பந்ததாரர்கள் சம்பளம் வழங்கி னால் மட்டுமே பணிக்கு செல் வோம் என தெரிவித்த தொழிலா ளர்கள், தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டதால் மருத்துவமனை யில் பணிகள் முடங்கின.