districts

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவாரூர், ஜன.11-  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்ப கோணம் கோட்டம் சார்பில்  சென்னையிலி ருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட் டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதா ரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங் கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய நகரங்களுக்கு ஜனவரி 12, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  மேலும் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டி னம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்க ளுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர்  ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்  கோட்டை ஆகிய ஊர்கள் மற்றும் கும்ப கோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்குட்பட்ட அனைத்து முக்கிய நகரங்க ளுக்கும் ஜனவரி 12 முதல் 14 வரைஇயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி மன்னார் குடி. நன்னிலம், திருவையாறு, ஒரத்த நாடு தட பேருந்துகள். தாம்பரம் சானிடோரி யம் (MEPZ) அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி, அரி யலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, இராம நாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டி னம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம் பேடு புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப் பட உள்ளன. பொங்கல் முடிந்து மீண்டும் அவரவர் ஊர்களுக்கு செல்ல ஜனவரி 16, 17, 18  ஆகிய தேதிகளிலும் சிறப்பு பேருந்து களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தாக கும்பகோணம் போக்குவரத்துக் கழக  மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள் ளார்.