districts

img

திருவாரூரில் தொடர் மழை

திருவாரூர், டிச.17 - வடகிழக்கு தொடர் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பயிர் சேதங்களை உடனடியாக கணக்கெடுத்து, அதற்குரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விவசாயி கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், “வடகிழக்கு பருவ மழை வழக்கத்தைவிட கூடுதலாக பெய்ததால், திருவாரூர் மாவட்டத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் குறுவை விவசாயம் நடைபெற்றது. இந்தாண்டு, அது மூன்றில் ஒரு பங்காக குறைந்த நிலையில், சம்பா சாகுபடி சுமார் 2 லட்சத்து 80 ஏக்கரில் நடை பெற்றுள்ளது.  அதேபோல் தாளடி சுமார் 50 ஆயி ரம் ஏக்கர் விவசாயம் நடைபெற்று நெற்பயிர்கள் நன்றாக இருந்த நிலை யில், தொடர் கனமழையால் மாவட்டத் தின் அனைத்து ஒன்றியங்களிலும் ஆங்காங்கே நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளன.

கதிர் வந்த பயிர்கள், முற்றிய நிலையில் உள்ள பயிர்கள், இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கிவிட்டன. ஏக்கர் 1-க்கு 35 ஆயிரம் வரை உற்பத்தி செலவு செய்த நிலையில், கடுமையான பாதிப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். முழுமையாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு குறைந்தபட்சம் ஏக்கர் 1-க்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். சம்பா, தாளடி பயிர்களுக்கு  இன்சூரன்ஸ் செய்துள்ள விவசாயி களுக்கு முழுமையாக காப்பீட்டுத் தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்னிலம் ஒன்றியத்தில் நண்ட லாறு, நாட்டாறு, வாஞ்சியாறு உள்ளிட்ட  ஆறுகளில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ள ஆகாயத் தாமரை களை உடனடியாக அகற்ற வேண்டும். இடியாற்றில் அசனகுடியில் உடைப்பு  ஏற்பட்டு சுமார் 500 ஏக்கர் வரையி லான நிலம் முற்றிலும் நீரில் மூழ்கி  இழப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறப்பு முகாம் அமைத்து, கணக் கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு இழப்பீட்டு நிவாரணம் வழங்க வேண்டும். மாவட்டம் முழுவ தும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை ஆய்வு செய்து பாதிப்பு பட்டியலை வெளியிட வேண்டும்.  

ஆடு, மாடு, கோழிகள் இறப்பும்  நோய் வாய்ப்பட்டும் பாதிக்கப்பட்டு உள்ள கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். செங்கரும்பு, மர வள்ளிக்கிழங்கு, தென்னை பாதிப்பு களுக்கும், கடலோர மீனவர்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை கணக்கிட்டு, கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது  சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தலைவர் எஸ்.தம்புசாமி மற்றும் சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செய லாளர் தியாகு.ரஜினிகாந்த், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் எம்.ராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.