திருவாரூர் , ஜூன் 10 - திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பவித்திரமாணிக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களின் சிறப்பான சேவையால் தரமான மாணவர்களை உருவாக்கி வரு கிறது. பெற்றோர் ஆசிரியர் கழகத் தின் பங்களிப்பாலும், பெற்றோர்களே கூட தன்னார்வலராக கற்பிக்க முன்வரு வதாலும் மாணவர் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. இப்பள்ளியிலிருந்து தேர்வான மாணவர்கள் விளையாட்டுப் போட்டி களுக்காக நேபாளம் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சிறப்புகளால் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 250 மாணவர்கள் மட்டுமே படிப்ப தற்கான கட்டமைப்பு வசதியுள்ள, இப்பள்ளியில் 417 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கினால் மேலும் 250 மாணவர்கள் புதிதாக சேர வாய்ப்புள்ளது. ஆனால் இப்பள்ளி நிர்வாகம் சந்திக்கும் நெருக்கடிகளால், இந்த ஆண்டு சேர்க்கை நடைபெறுமா என்கிற சந்தேகம் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.
கிராம சபை தீர்மானம்
பள்ளியின் அருகில் பழைய ஊராட்சி மன்ற கட்டிடம் உள்ளது. தற்போது ஊராட்சி மன்ற அலுவலகம் சேவை மையக் கட்டிடத்தில் இயங்கி வரு கிறது. மேலும் அரசு ஊழியர் குடி யிருப்பு வளாகத்திலேயே புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டப்பட்டு வரு கிறது. எனவே வகுப்பறை பற்றாக் குறையை களைய, பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் இரண்டு தளங்களையுடைய 4 வகுப்பறைகளைக் கொண்ட கட்டி டத்தை கட்டுவதென கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளதாக ஊராட்சி மன்றத் தலைவர் குறிப்பிடுகிறார். அதன்படி அங்கு வகுப்பறைகளை அமைக்க வேண்டும்
விளையாட்டு மைதானம்
பள்ளியின் பின்புறம் இருந்த பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கட்டி டங்கள் இடித்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, மாவட்ட ஆட்சியர் தலையீட்டி னால் அவ்விடம் தற்காலிகமாக விளை யாட்டு மைதானமாக உள்ளது. ஆனால் குறிப்பிட்ட அந்த இடத்தை முறைப்படி வகைமாற்றம் செய்து, முற்றிலுமாக பள்ளியின் வசம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய ஆணையர், தலைவர் ஆகியோர் முன் முயற்சி எடுத்து இந்த மைதானத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து அதில் வகுப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும். இப்பள்ளியில் பெண்களுக்காக 6 கழிவறையும், ஆண்களுக்காக ஒரு கழி வறையும் உள்ளது. ஒரே ஒரு கழிப்பறை இருப்பதால் இடைவேளை நேரத்தில் எல்லா மாணவர்களையும் வெளியே விடுவதில்லை. மாணவர்கள் தேவை இருக்கிற போது மட்டும் கழிப்பறை செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இத னால் சில மாணவர்கள் சிறுநீரக பிரச்ச னைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட கல்வி அலுவலரும், மாவட்ட நிர்வாகமும் உரிய முறையில் தலையீட்டு வகுப்பறை, கழிப்பறை, விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். அரசுப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாணவர் சேர்க்கை தொ டர்பான விளம்பரங்கள் மட்டுமே போது மானதல்ல. அதற்கேற்ப கட்டமைப்பு களை உருவாக்குவதும் அவசியம்.