districts

img

இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு சமூக வலைதள குழு அமைப்பு

திருவாரூர், ஜூலை 7- இந்திய மாணவர் சங்க தமிழ் மாநில 26-ஆவது மாநாடு  ஆகஸ்ட் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் திருவாரூரில் நடைபெறவுள்ளது.  மாநாட்டில், அகில இந்திய அளவிலான தலை வர்கள் பங்கேற்க உள்ளனர். அதற்கான ஆயத்த பணியாக  மாநாட்டு செய்திகளை முன்னெடுத்து செல்வதற்கான சமூக வலைதள குழு உருவாக்குவது என முடிவு செய்யப்  பட்டு அதற்கான சமூக வலைதள குழு தயாரிப்பு கூட்டம்  வியாழனன்று திருவாரூர் பி.ராமமூர்த்தி நினை வரங்கத்தில் துவங்கியது.  கூட்டத்திற்கு வரவேற்புக் குழு தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான ஐ.வி.நாகராஜன் தலைமை ஏற்று, மாநில மாநாடு சம்பந்தமாகவும் வலைதளக் குழு சம்பந்த மாகவும் பேசினார். சமூக வலைதளங்களில் செய்திகளை எப்படியெல்லாம் கொண்டு செல்வது என்பது பற்றி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் ஆலோசனை வழங்கினார்.  இதற்காக 12 பேர் கொண்ட வலைதள குழு உருவாக் கப்பட்டது. மூன்று நாள் மாநில மாநாட்டு செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை நேரடியாக தொகுத்து வழங்குவதற்கு ஒரு குழுவும், திருவாரூர் மாவட்டத்தில் 30 லட்சம் பேரி டம் வலைதளம் வாயிலாக மாநாட்டு செய்தியை கொண்டு  செல்வதற்கு ஒரு குழுவும் வாட்ஸ் அப் பேஸ்புக் இன்ஸ்டா கிராம் மற்றும் ட்விட்டர் நான்கு வலைதளங்களுக்கும் நான்கு பேர் கொண்ட அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வரும் 10,000 நபர்களை இணைப்பது என்று முடிவு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் கூட்டம் நடை பெற்றது.