திருத்துறைப்பூண்டி, டிச.24- திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டி நகரில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கு வது-கொடுப்பது குற்றமென பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் அறிவிப்பு பலகை யில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பா லான தொடர்பு தொலைபேசி எண்கள் சுவிட்ச் ஆப் நிலையி லேயே உள்ளன. சில தொலைபேசிகளின் தொடர்பு கிடைத்தால் இடமாறுதல் ஆகிவிட்டதாக தெரிவிக்கின்றனர். லஞ்சம் ஊழல் சம்பந்தமான புகார்களுக்கு சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவை எளி தாக அணுக முடியும் என்ற நிலையிருந் தால்தான், ஊழல் தடுப்பு நோக்கத்தின் மீது மக்களிடமிருந்து அரசு நம்பிக்கையை பெற முடியும். எனவே அலுவலகங்களில் வைக்கப் பட்டுள்ள லஞ்சம் ஊழல் சம்பந்தப்பட்ட புகார் களுக்கான தொடர்பு தொலைபேசி எண்கள் குறிப்பிட்ட கால இடைவெளி களில் திருத்தப்பட வேண்டும் அல்லது மாறு தல் செய்யப்பட வேண்டும் என திருத்து றைப்பூண்டி மக்கள், சமூக நலஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட நிர்வா கமும் அரசும் இதில் நடவடிக்கை எடுக்குமா?