திருவாரூர், ஜூன் 15 - திருவாரூர் ஒன்றியம் தேவகண்டநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பர்வீன் பானு (23). இவர் கடந்த சில வாரத்துக்கு முன்பு பிரசவத்துக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த நான்கு நாட் களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்து நலமாக இருந்துள்ளார். திங்களன்று காலை திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே அருகிலிருந்த உறவினர்கள் பணியி லிருந்த செவிலியரிடம் தெரிவித்துள்ளனர். செவிலியர் இத்தகவலை மருத்துவருக்குத் தெரிவிக்காமல் செல்போன் பார்த்துக் கொண்டு அலட்சியமாக இருந்துள்ளார். மேலும் அந்நேரத்தில் பணியிலிருக்க வேண்டிய பணி மருத்துவர் பணியில் இல்லை. இதனால் சுமார் ஒரு மணி நேரத் துக்கும் மேலாக உரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை. இதனால் குறித்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பர்வீன் பானு பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவக் கல்லூரியில் அலட்சிய மாக செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர் களைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜி.ரகுராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், நகர செய லாளர் எம்.தர்மலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமை தூக்கும் தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், நகர குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணி யன், ராஜேந்திரன், கிருஷ்ணகுமார் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். மருத்துவர் மற்றும் செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயிரிழந்த பர்வீன் பானு குடும்பத் துக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், துணை காவல் கண்காணிப்பாளர் சிவராமன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையின் முடிவில் இச்சம்பவம் குறித்து விசாரணைக்குழு அமைக்க மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். மேலும் இழப்பீடு தொடர்பாக தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வது எனவும் முடி வெடுக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.